Monday, December 11, 2017

லிமரைக்கூ 518

ஆயிரஞ் சொல்லி
கலியாணம் ஒண்ணு பண்ணு
வாக்கு கை நீட்டில் !

ஹைகூ 5130

தினம் விழுந்தும்
ஒரு நாளும் உதிராது
அதுவா ? ஒளி !

சென்றியு 6503

பள்ளத்தில் விழும்
வாகன எண்ணிக்கைகள்
உயர்ந்து போச்சே !!

லிமரைக்கூ 517

எது போனாலும்
வரும் தூக்கம் வருமா
கை பேசி போயும் ?

லிமரைக்கூ 516

ஒரு  செயலால்
மறு மனம், பதவி
விட்டு விலகல் !

சென்றியு 6502

பா ரதியின் கை
தூக்கிவிட்ட பாரதி
எழுச்சி முத்தம் !

ஹைகூ 5129

தென்னையில்தான் தேள்
கொட்டிச்சாம் பனையிலே
நெரி கட்டிசாம் !

ஹைகூ 5128

கூன் நிமிராத
சுமை தாங்கியானதோ
பொழிந்தும் வானம் !

Sunday, December 10, 2017

சென்றியு 6501

பட்ணத்திலும் கூழ்
குடிக்க ஆள்கூட்டமாந்
அலை போதுதே !

ஹைகூ 5130

கரும்பிருக்க
வேம்பையா பிளிதிடும்
கைகளென்றாலும் ?

ஹைகூ 5129

தண்ணீருடனே
கண்ணீர் துளி யல்லவா
வடிந்தோடுது !

சென்றியு 6500

தொலைஞசும் போச்சா
மனித உரிமைகள் ?
உலக தினம் !

சென்றியு 6499

மீனவர் துணை
மீனவரைத் தேடிட
கடல் அலைமேல் !

ஹைகூ 5128

கடல் மக்களும்
பொங்கிப் போராடுகிறார்
வானிலை மோசம் !

Saturday, December 9, 2017

சென்றியு 6498

விலை வைக்கிற
தலைகள் எல்லை மீறிப்
போய்க்கொண்டிருகே !

சென்றியு 6497

கடை நிமிட
வார்த்தைச் சாலங்கள் வெற்றி
வாய்ப்பை தகர்க்கும் .

லிமரைக்கூ 515

விழுந்தால் பழம்
தொங்கின் மனித குலம்
செத்துப் போயிடும் ! 

சென்றியு 6496

எங்களுக்குத்தான்
பிரகாசம்,எல்லோரும்
சொந்த சோதிடம் !

லிமரைக்கூ 514

இங்கே யாருக்கோ ?
ஆர்கே நகர் வைத்துள்ள
வெற்றி யாருக்கோ ?

Friday, December 8, 2017

லிமரைக்கூ 513

உதிக்கும் முனை
சிவக்கும் கண்கள்,பிடி
படாத துணை !

சென்றியு 6495

படிப்போர் தம்மை
நடிபோராக்கி ஆணை
யிடுவோர் ஆசை !

லிமரைக்கூ 512

நடிப்போர் நோக்கம்
தலைவர் பதவியில்
உயர்ந்தாகணும் !

ஹைகூ 5127

அடுப்பு ஓய்வில்
தலை கொதிப்பில்,மழை
விளைவுகளால் !

லிமரைக்கூ 511

தடித்த வார்த்தை
துடிக்குது நாவுகள்
தூண்டும் ஆபத்தை !

சென்றியு 6494 *

விளை நிலத்தில்
வீடுகள் மழை வந்து
தண்ணி காட்டுதோ ? !

Thursday, December 7, 2017

லிமரைக்கூ 510

நாக்காலி நிக்கு
களத்தால்,மீட்பதோ
நற்கடமைகே .

லிமரைக்கூ 509

வலைத் தளங்கள்
பெருங் கொலைக்களங்கள்
நேரங் கொல்லும் நாள் !

சென்றியு, 6493 *

பேசியோர் வாய்கள்
பேசிக்கொண்டே இருக்கு
பேசார் திறவார் !

சென்றியு 6492

வாழ்நாள் சேமிப்பைக்
காட்டுவார் பேச்சாளர், நொடி
வெற்றியில் வேட்பர் !

லிமரைக்கூ 508

விழுதை நம்பி
தொங்கினாரு, சொந்தக்கால்
இழந்தார் தம்பி !

லிமரைக்கூ 507

சுரை நட்டது
சுண்டை காய்க்குது ! அது
தான் அரசியல் !!

லிமரைக்கூ 506

சின்னஞ் செயலா
எது வெல்லும் ? காலத்தைக்
கேள் தெளிந்த சொல் !

Wednesday, December 6, 2017

லிமரைக்கூ 505

திரையுலகில்
புகழ் வந்திட்டா,ஆட்சி
வருமா கையில் ?

எச்சரிக்கை(06-12-2017)

நாகை மற்றும் கடலூர் துறைமுகத்தில் 1ம் எண்

புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

சிறப்புச் செய்தி(06.12.2017)

துணிகளை காயவைக்கும் போது...

லிமரைக்கூ 504 *

வான் போல் மனமும் புகைந்து திரிகிற நிலையில்தானாம் !லிமரைக்கூ 503 *

கல் மணலுக்கும்
உயர்(ந்த) மதிப்பு எப்போ
மனிதருக்கும் ?

லிமரைக்கூ 502 *

பணம் புகழும்
சம்பாதித்த பின் வேண்டும்
பதவிகளும் !

Tuesday, December 5, 2017

லிமரைக்கூ 501

வீண் விளம்பரம்
தடை,காரியத்துக்கே
ஆதரவாகும் !  

சென்றியு 6491 *

கரை மீறிய
வெள்ளம்,பாதை இல்லாது
ஆக்கிய கோபம் !

லிமரைக்கூ 500

அரசியல் சேர்
ஆசை-எல்லோருக்குமே
பார் ஆர்கே நகர் !

லிமரைக்கூ 499

இரு திசையில்
ஒருவர் நினைவு நாள்
கறுஞ் சட்டையில் ! 

லிமரைக்கூ 498

அடிமேல் அடி
விழுந்த பின்னும் என்ன
தான்,அதிரடி ?

சென்றியு, 6490

விளம்பரத்தைத்
தரும்,வேட்புமனு தாக்கல்
வெற்றி ஒன்றுக்கே .