Wednesday, June 26, 2019

ஹைகூ 5386

மேகமுங் கூட
அவதிப் படுதோ ? நீர் 
கடுப்பு சொட்டி !!

லிமரைக்கூ 11201

கடலெல் லாமே
கொந்தளிப்பு,ஆயுதக்
கப்பல் மயமே !!!

லிமரைக்கூ 1200

எதிர் நீச்சலின்
வலிமை எத்தனை நாள்
மறைத்து வைப்பான் ?

லிமரைக்கூ 1199

பொய்யுக்கு அஞ்சி
மெய்யை மறுப்பதுவும்
குத்தாதா சாட்சி ?

லிமரைக்கூ 1198

இப்பொழுது தானே
நினைவு வந்திருக்கு
நாம் தமிழரென !

Tuesday, June 25, 2019

லிமரைக்கூ 1197

அபாரப் போட்டி
நான் முந்தி நீ முந்தியாய்
வணிகப் போட்டி .

லிமரைக்கூ 1196

அதரவு கேட்டு
அழைக்கிறார்கள் வீட்டு
வாசலில் வந்து !

லிமரைக்கூ 1195

கேட்டுக்கொண்டேதான்
இருக்கு, தேர்தல் பின்னும்
எதிரொலிதான் !

லிமரைக்கூ 1194

விபத்தைக் காட்டி
மூடப்பட்டு விட்டது
டாஸ்மாக்கைப் பூட்டி !

லிமரைக்கூ 1193

திறந்தாச்சு வாய்
திறக்க வேண்டியது
அந்த மதகை !

லிமரைக்கூ 1192

கட்டிய காலம்
இல்லை, இது ஒட்டிய 
கால வேட்டியாம் !

லிமரைக்கூ 1191

தண்ணீரா ? கண்ணீர் !
இங்கே அனந்தக் கண்ணீர்
வியாபார நீர் !

Monday, June 24, 2019

ஹைகூ 5385

முறுக்கு ஆனால்
நொருங்கா விட்டால்,யார்தான்
கொள்வாரோ ஆவல் ?

லிமரைக்கூ 1190

ஊரு உலகம்
இறுகிப் போக் கிடக்கே
விடிவு வரும் ? !

சென்றியு 7133 *

குடத்துக்குள்ளே
வர,அடம் பிடிக்கு
குடிக்கத் தண்ணீர் !!!

லிமரைக்கூ 1189

தேற்றுவானில்லை
தோற்று விட்டவனை ! பார்
அரசியலை . 

ஹைகூ 5384

ஓடிக்கிட்டேதான்
பிரசவ வேதனை
மேகக் கூட்டங்கள் !

லிமரைக்கூ 1188

அனல் பறக்க
அக்காக்களும்,விவாத
மேடை கலக்க..!

Sunday, June 23, 2019

சென்றியு 7132

மானல்ல பாயும்
மீனல்ல மூழ்கும். இந்த
நீர் மூழ்கி க் கப்பல் !

லிமரைக்கூ 1187 *

களம் பலவும்
கண்டிட்ட விளம்பர
உலக தேர்வாம் ! 

Saturday, June 22, 2019

லிமரைக்கூ 1186

சுவாசிப்பது
போலே வாசிப்பதுவும்
ஆகி விட்டது !

சென்றியு 7131 *

புல் நெல் உயிர்கள்
எதுக்கும் இல்லை,விற்பனை
நோக்கத்துக்கே நீர் !

லிமரைக்கூ 1186

சிலர் குளம் போல்
கால்வாய்,சிலர் தூர்வார
வைப்புப் பணத்தில் .

ஹைகூ 5383 *

மண்ணு குடிச்சி
காற்று குடிச்சு,தண்ணீர்
சேத்து வைச்சுச்சி..!!..??

லிமரைக்கூ 1185

புளிச்சதிலே
வெளிச்சம் போட்டு,வாய்கள்
பல் சுவையிலே !

Friday, June 21, 2019

லிமரைக்கூ 1184

துள்ளும் காலாலே
மான்,துள்ளும் கருத்தலை
சீமான் வாயாலே !

லிமரைக்கூ 1183

காடு அழித்தோம்
ஆடு மாடு மழை மண் 
மலை இப்போதும் !!!

ஊக்கந்தரும் பிறர் ஆக்கங்கள் *


இதுவே தருணம்
ஒற்றையடிப் பாதையில்
காலில் செருப்புமின்றி
இருட்டை மிதித்து நடந்த நாட்களில்
அவர்களின் கனவு என்னவாக இருந்திருக்கும்?
செம்மண் சாலையில்
மாட்டு வண்டியினைப்
பின் தொடர்ந்து நடந்த நாட்களில்
அவர்களின் கனவு என்னவாக இருந்திருக்கும் ?
கிராமத்து தெருவில்
கார் ஒன்று நுழைந்த போது
ஊரே கூடி வேடிக்கை பார்த்த நாட்களில்
அவர்களின் கனவு என்னவாக இருந்திருக்கும் ?
ஒரு வழிச் சாலை
இருவழிச் சாலை
நான்கு வழிச் சாலை
ஆறு வழிச் சாலை
மேம்பாலம்
அடுக்கு பாலம்
விரிந்து விரிந்து விரிந்து
நகர் வீங்கி வீங்கி வீங்கி
இப்போது
அவர்களின் கனவு என்னவாக இருக்கிறது
குடிநீர் …காற்று … பசுமை … தூய்மை ..
ஒற்றையடிப் பாதையிலேயே
நின்றிருக்க முடியுமா ?
ஒற்றையடிப் பாதைக்குத்
திரும்பிப் போக முடியுமா ?
அதுவும் சாத்தியமல்ல
இதுவும் சாத்தியமல்ல
எங்கே தவறு செய்தோம் ?
நுகர்வு எனும் பெரும்பசியில்
நாம் தின்றது எவை ? செரித்தது எவை ?
மீதம் இருப்பது எவை ? எவை ?
இன்னும் நம்பிக்கை இற்றுவிடவில்லை ?
யோசிக்கவும் செயல்படவும்
இதுவே தருணம்!!!
சு.பொ.அகத்தியலிங்கம்.
21 ஜூன் 2019 .இரவு .8.02


ஹைகூ 5382

பல்லாயிர் நல்லா
வாழ வைக்கிறதுதான்
மண்ணில் மரங்கள் .

ஹைகூ 5381

உயிர் காக்குது
உயிர் இல்லாததுதான்
அதுவா நீர்தான் !

ஹைகூ 5380

நெளிவு களும்
சுளிவுகளும் பாம்பே
அறிந்த இனம் !

லிமரைக்கூ1182

மிரட்டப் போனோர்
மிரண்டு போவதுவும்
சாத்தியங் கேழீர் !

லிமரைக்கூ, 1181

விசையோடவே
வசை பாடகர்கள்,ஆ!
அதிகமாவே !!

Thursday, June 20, 2019

லிமரைக்கூ 1180வான்கொடை ஊத்த
கைக்குடை காக்க,நடை
கடக்கும் பாதை !

சென்றியு 7130

குருவி கண்டு
இரங்கிறான்,மனிதன்
கூடு வைக்கிறான் .

லிமரைக்கூ 1179

ஊருடன் பகை
வேருடன் கெடும்,இதை
மாற்றுமோ நிலை ?

சென்றியு 7129 *

வறண்ட சென்னை
திரண்ட வெள்ளம் ,முதல்
பருவ மழை !