விண்ணிருந்து மண்ணிறங்கித் தான்பிறந்த சின்னேசைப்
போற்றும் புதுநாள்
விண்காப்பர் மண்மேய்ப்பர் கண்ணெதிரே கானகத்தில்
வியர்ப்புப் பனிநாள்
கண்மணியில் விண்வெளியில் கிழக்கத்தி ஞானிக்கு
காணித்த தனிநாள்
தாவீதின் பெத்தலையில் தாயாகும் புத்தூரில்
கன்னி மரியார்
போகாத சத்திரமோ பாராத வெத்திடமோ
வைத்து வையார்
நேராகத் தொழுவத்தில் பேர்காலக் கந்தையில்
நோகாப் பாலகர்
ஆள்அரவம் இல்லாத நள்ளிரவில் பிறந்தாலும்
ஆங்கோர் தூதாம்
ஆளில்லை பெற்றவீட்டில் யோசேப்பும் மரியாரும்
கேளாக் கிளையாம்
கேள்வியுற்று கண்தூங்கா மேய்ப்பரோடு ஞானியரும்
ஆழ்ந்தும் தெளிந்தும்
ஆவலோடு மேய்ப்பர்கள் தேடலோடு தகவலிடம்
போகவும் பார்க்கவும
ஆதாரங் கண்டதாலே தோதாகச் சொன்னதையும்
ஆங்கோர் பரப்பும்
தேவசெய்தி மக்களிக்குத் தேங்கீத எதிரொலியாம்
தீங்கில் உணர்வாம
கிழக்கத்தி சாத்திரிகள் விளக்கத்தில் எருசலேமின்
வழியைத் துளாவ
விளங்கிப்போய் பெத்தலைக்கு ஒட்டகத்தை ஓட்டிடுமுன்
வெள்ளிப் புள்ளிவழி
நடத்தித் தொழுவத்தில் தொழுதெழுவோர் பழுதிலார்
விழுந்து எழுந்தார் !!!

No comments:
Post a Comment