Monday, December 9, 2024

 புத்தாண்டு  வாழ்த்து

******************

ஆண்டு  உருண்டு

     உருண்டு  கணக்கில்ல

ஆண்டவன்  பிறந்தபின்

     கணக்கில்  தப்பில்ல


பாதை  நடுவில்

     புதுஒளி  இயேசு

பாதை  விழுந்தது

     முன்னும்  பின்னும்


அன்பு  கொண்டது

     மண்ணும்  விண்ணும்

இன்பங்  கண்டது

     கண்ணும்  மணுயும்


புத்தாண்டு  பிறந்தது

     புத்துணர்வு  தந்தது

சத்துணர்வு  கொண்டது

     உத்வேகம்  மூண்டது


துல்லியக்  கணக்கு

     நல்கிய  ஆண்டு

வெல்லும்  வரலாறு

     சொல்லும்  வாழ்வோடு 


யுத்தம்  இல்லா

     யுத்தி  எல்லாம்

நித்தம்  நாட்டுவோம்

     நிரந்தரம்  கூட்டுவோம்


பஞ்சம்  இல்ல

     பட்டிணி  இல்ல

நெஞ்சக்  கூண்டில

     தஞ்சம்  அன்பில


ஒத்துமை  சித்தமாய்

     உத்தமக்  கைநூள்க

அத்தனை  வளங்களும்

     ஆள்க ! வாழ்க !!


ஆக்கம்-மணிமுத்து.



Tuesday, August 27, 2024

அமைதி ?

 அமைதி இல்ல 

      அக்கபக்க தொல்ல

சண்ட பழக்கம் 

       கொண்டா  அமைதி

என்ன செய்ய--எம்மக்கா

யார்தருவா அமைதி ??????   

       




Sunday, August 18, 2024

சுதந்திரக்கொடி

 பறக்குது  சுதந்திரக்கொடி

    பனிஇமய  நுனியிலே

படைவீரர்  பாசக்கொடி

    வெண்சியாச்சின்  சிகரத்திலே .

Wednesday, August 14, 2024

சுதந்திரத்தினம் 78.

          சுதந்திரத்தினம்  78. 

            *****************

அந்நியர்கைகளில்  அகப்பட்டஉணர்வில்

      நொந்தழுந்தி  மீட்டெழும்பி

வண்ணக்கொடி  எண்ணப்படி

     விண்ணில்காணும் சுதந்திரத்திருநாள்!


பாட்டில்போற்றும்  நாட்டுமக்கள்

      வீட்டைக்காக்க  சுதந்திரப்படைகள் 

தேடியசுதந்திரம்  நீடியவாழ்வும்

      கூடியகைகள்  உயர்வதிலாம் ! 


Thursday, April 25, 2024

ஒற்றையடிச் சிந்து 563.

 வாக்கை விக்கும் வயிற்றுப் பசியிடம்

வளர்ச்சிக் கணக்கு--எந்தப்

பாடத்தில் இருக்கு ?..!


Monday, March 18, 2024

ஒற்றையடிச் சிந்து 562.

என்னயா  சோதனை ?

         உன்னயா..!  வேதனை !!

உறவுகள்  வளருது--உணர்வுகள்

உண்மைகள்  உணருது !!!

Saturday, March 16, 2024

ஒற்றையடிச் சிந்து 561

வெள்ளை  வட்டமே

        வெற்றியின்  உச்சமே !

உள்ளதுள்  சுத்தமே--உணர்த்துது

சூழ்நிழல்  ஆட்டமே !!