Friday, September 24, 2010

புதுக்கவிதை 4

தோணி முதல் தமிழனுக்கே தோணி

****************************************
தோணி-அது
மனித முன்னேற்றப் படிகளின்
ஏணி !
ஆதியில் மனிதன்
மிதவையைக் கண்டான்
மிதக்க நினைத்தான்
களைகளைத் திரட்டினான்
கொடிகளால் கட்டினான்
நெடிது விரித்தான்
நதியில் போட்டான்
நீர்மேல் நின்றான் !
நெடுந்துரங் கடந்தான் !!
மரங்களைக் குடைந்தான்
மிதக்கப் போட்டான்
ஈரம் படாமல்
நீருள் கடந்தான்
ந்தியைக் கடந்தான்
மீன்களைப் பிடித்தான்
ஏற்றியும் இறக்கியும்
பண்டங்களை
ஆற்றின் கரையேற்றினான்
நீர்மேல் தொட்டில்
தென்றல் காற்றில்
திரண்ட அலைகளால்
ஆடியது ஊஞ்ல் தோணியதை
அனுபவித்த்தோ மனிதன்
துடுப்பின் துணையால்
பாயும் மீன்கள்
மனித மூளையைத் தட்டி எழுப்ப
துடிப்பாய்
கையில் துடுப்பாய்
கட்டைகளை எடுத்தான்
துடுப்பு வலித்து
கடந்தான் கடலையும்
கண்டான் காற்றைக் கடலில்
படகை இழுக்கும் உண்மைகள் கண்டான்
நீரின் ஓட்டமும்
காற்றின் வேகமும்
தோணிக்கு உயிரூட்டும்
சக்தியைக் கண்டதும்
கப்பலைப் படைத்தான்
காற்றை மறித்துப்
பாய்களைக் கட்டினான்
கண்ணங்களைக் கடந்தான்
தமிழக முப்பும் மிளகும்
அரபுக் குதிரைக்கு
பண்ட மாற்றாயின-அது
பன்நூறாண்டுகள் முன்னே
இன்றோ தமிழன்
உலகெலாம்.

No comments: