Tuesday, December 28, 2010

புத்தாண்டு (2011)

  •             புத்தாண்டு (2011)
  • சிறுசிறு நொடிகளும் குறுகுறு நடைகளும்
  •               நொடியிடை வருடமும் விடிவுறும்
  • அரும்பெரும் திரவியம் தருமொரு புதுயுகம்
  •                பளிச்சிடும் ஓளிச்சுடர் கிழக்கிலாம்

  • இலைநுனி இளம்பனி பலுகிடும் இரவிலும்  
  •               இளமலர் இதழ்விரி அழகிலும்
  • தலையெழு மலரிடை உலவிடும் மணநலம்
  •            களிப்புடன் தழைத்திடும் விரைவிலாம்

  • இரவிலும் பகலுலும் இடைவிடா செயலிலும்
  •              இணையிலா கதிரவன் பணியிலும்
  • வரவிலும் செலவிலும் வரைமுறை வரைந்திடும்
  •              வளங்களாய் விளைந்திடும் நிறைவிலாம்
  • இறையருள்   விருப்புடன்   பெறச்செபித்   திருப்பவர்

                 புதுப்பெலன்   கழுகெனப்   பெறுவராம்

    விரைந்தவர்   சிறகடித்   தெழுவதில்   களைப்புறார்

                 நடந்திடத்   தடையிலாத்   திடம்வரும்

  • எழும்இறை   மகிமையால்   வளந்தரும்   நமக்கருள்

                 இறங்கிடும்   கிருபையில்   விழித்தெழு

    வெளிச்சமாய்   இறைவனே   உனக்கினி   வருவதால்

                 பயனடை   துயர்துடை  வருடமாம் !!!

No comments: