Saturday, January 8, 2011

  • பொங்கல் வாழ்த்து
  • -------------------
  • ஏர்பூட்டி    தார்நீட்டி
  • வேரெட்டும்    தூர்மட்டும்
  • கூரிட்ட     கொழுநீட்டி
  • கீறிட்ட     நிலத்தில்

  • பயிரிட்டு   பயன்பெற்று
  • வியர்வைதந்த   விளைவுக்கு
  • உயர்மதிப்பின்   உணர்வூட்டி
  • பெயர்பெற்ற   பொங்கலின்று

  • பலதொழிலால்   உலகைச்சுற்றும்
  • நலநட்பும்   பலஉறவும்
  • விலைமதியா    குலவிழுதுக்கும்
  • சொல்லுகிறேன்   நல்வாழ்த்து.

No comments: