Wednesday, February 2, 2011

தெருக் குரல் 11

  • தொட்டவனைத்
  • திட்டவில்லை
  • பாட்டியா ?

  • இல்லையவள்
  • பருவப்பெண் !

  • கெட்டவனைக்  கண்டு
  • ஒதுங்க  வில்லை

  • விரும்பினாளா ?
  • இல்லை
  • பரிதாபப்  பட்டாள்!

  • அவனும்  வாலிப  வசந்தத்தில்
  • நின்றான்

  • காமமும்  மனிதமும்
  • சந்தித்த  கணம்

  • கூப்பிட்டாள்
  • போனான்
  • தேநீர்  கடைக்கு

  • சாய்ந்து  விட்டது
  • சரக்கென்று
  • பூரித்து
  • கற்பனையில்  குதித்தான்

  • தேநீரோடு  கொஞ்சம்
  • தெளி  புத்தியும்
  • புகட்டினாள்

  • நொந்து  போய்
  • தன்  செயலுக்கு
  • வருந்தினான்
  • திருந்தினான் !

  • கனத்த  நெஞ்சோடு
  • நடந்து
  • பூங்கா  ஒன்றுக்குள்
  • அடைக்கலமானான்

  • அது  ஒரு
  • மத்தியானம்

  • மர  நிழல்
  • மனித  வேடந்தாங்கலாய்
  • தோன்றின

  • பள்ளித்  தோழனைக்
  • கண்டான்

  • இறுதி  வகுப்பு
  • கடைசி  வரிசை
  • ஆள் அவன்

  • இவனோ
  • முதல்  வரிசை

  • இரு  வரிசைக்கும்
  • உருவத்தில்
  • வயதில்
  • உலக  அனுபவத்தில்
  • பள்ளி  சாரா
  • அனுபவ  படிப்பில்
  • வித்தியாசப்
  • படிகள்  பல

  • அவர்  சந்தித்த  இடம்
  • வேலை  தந்த
  • நம்
  • பொருளாதார
  • நகரம் !

  • தாய் தந்தை
  • கண்காணிபபோ
  • அறுந்த  நிலை

  • முதல்  வரிசை
  • கடைசி  வரிசையிடம்
  • தன் குமுலை
  • கசிய  விட்டான்

  • பாடந்  தவிர
  • வேறு  ஏதும்
  • படிக்காதவன்
  • முதல்  இருக்கை
  • பெண்  பற்றி
  • பேசினாலே
  • முகஞ்  சுழித்து
  • பழி  சொல்லி
  • விலகுவான்  அன்று

  • சில  ஆண்டுகளில்
  • பெண்  பித்தனாக
  • பரிணமித்தான்

  • கண்டு  கொண்டான்
  • தொடர்  வண்டியில்
  • பெண்  கூட்டம்
  • வேலைக்குப்  போகும்
  • நேரம்
  • நெருக்கடியானது

  • காற்றுப் புக
  • முடியா  நெருக்கு

  • அந்த  நேரத்தைத்
  • தேர்ந்து  கொண்டான்

  • வண்டி  நகர
  • ஓடி  அந்தப்  பெட்டியில் ஏறி

  • சுவரும்  பல்லியுமாய்
  • மாறிப்போவான்

  • இதில்
  • சுகம் காணுவோர்   சிலர்
  • பரிதாபப்  படுவோர்  சிலர்
  • செயலிழந்து  கொதிப்போர்  சிலர்

  • அந்தப்  பெண்களில்
  • ஒருத்திதான்
  • தேனீர்  காரியும்

  • தேனீர்காரி
  • உனக்கு
  • தாய்  சகோதரி  இல்லையா ?
  • அவர்களிடம்
  • ஒருவன்  இப்படி  நடந்தால்
  • என்ன  செய்வாய் ?
  • அதைப்போல்  எல்லோரையும்
  • நினை !
  • உணர்ந்து  திருந்திய
  • முதல்  வரிசைக்  காரன்
  • கடைசி  வரிசையிடம்
  • சத்தியம்  செய்தான்
  • இனி  இப்படி  நடக்காது .



No comments: