Monday, December 26, 2011

கவிதை பற்றி--1



                                                            கவிதை பற்றி 
1. கவிதை நேரடியாகச் சொல்லப்படுவதல்ல. நேரடியாக ஒன்றை சொல்லிவிடமுடியும் என்றால் அப்படியே சொல்லிவிடுவதே நல்லது. சொல்லமுடியாத ஒன்றைக் குறிப்புணர்த்தல் வழியாகச் சொல்வதே கவிதை
2. ஆகவே கவிதை என்பது மொழிக்குள் செயல்படும் தனிமொழி. வார்த்தைகளை நேரடியாகப் பொருள்கொள்வதன் மூலம் அல்ல அவற்றைக் குறியீடுகளாகவும் அடையாளங்களாகவும் எல்லாம் எடுத்துக்கொண்டு பொருள் கொள்வதன் மூலமே கவிதையை அறிகிறோம்.
                 கவிதையின் அழகியல்குறைபாடுகளை உருவாக்கும் சில அம்சங்கள் .
1. பழகிப்போன சம்பிரதாயமான உவமைகள், வருணனைகள், படிமங்கள் போன்றவை. கவிதையில் ஒரு உவமை வந்தால் அது புதியதாக இருக்கவேண்டும். வருணனைகள் உண்மையான அனுபவத்தின் வெளிப்பாடாக இருக்கவேண்டும். 
2. குறிப்புணர்த்தியபிறகு அத்துடன் நின்றுவிட வேண்டும். மேலும் விளக்க முனையக்கூடாது.
3.கவிதையில் உணர்ச்சிகளை மிகையாகச் சொல்லக்கூடாது. எந்த அளவுக்கு அனுபவம் உள்ளதோ அதை விட மிகக்கூடாது
                                  நல்ல கவிதையின் இலக்கணங்கள் மூன்று 
1. பிறிதொன்றிலாத புதுமை 2. கச்சிதமான வடிவ ஒருமை 3. உண்மையான அகவெழுச்சி
                                                வடிவச்சிக்கல
நல்ல கவிதைகளைத் தொடர்ந்து படிப்பதும் விவாதிப்பதும் வடிவச்சிக்கல்களைத் தாண்ட உதவும். 
-----------------------------------------------------------------------------------------------------------------------------
          ட்சக்கணக்கான மரபுக்கவிதைகளில் சிலபுறநானூற்று வரிகளும், கம்பரின் சிலகவிதைகளும், பாரதி பாரதிதாசனின் கொஞ்சம் பாடல்களும் மட்டுமே பரவலாக அறியப்பட்டிருப்பது போல-
ஆயிரக்கணக்கான புதுக்கவிதைகளில் சிலகவிஞர்களின் சிலவரிகளே நிற்பது போல –
நூற்றுக்கணக்கான ஐக்கூக்களில் ஒன்றிரண்டுதான் வாசகர் நெஞ்சில் உட்கார்;ந்திருக்கின்றன.

----------------------------------------------------------------------------------------------------------------------------- 
இடக்கர்அடக்கல்’ (இடக்கான தகுதியற்ற சொற்களை மாற்றிப்பேசுவது). ‘ஆய் வருதும்மா’- ன்னு சொல்லக்கூடாது. ஆனா -டூ பாத்ரூம் வருது-ன்னு சொல்லலாம்.

‘மங்கலம்’ (அமங்கலமான சொற்களை மங்கலமாக மாற்றிப்பேசுவது)
ஆடிப்பெருக்கில் தாலி சுருக்குவதை ‘தாலி பெருக்கிப்போடுவது’ என்பது.

அடிப்படையில் பார்த்தால் ‘தகுதியற்ற’ சொற்களை ‘நீர்தெளித்து’ தகுதிப்படுத்துவதுதான் இதன் உள்ளடக்கமும்

அது-தகுதிப்படுத்துவல்ல. இருக்கும் வேற்றுமைக்கு எதிரான கோபத்தை –சமாதானப்படுத்துவது- ஏற்கச்செய்வது – வேற்றுமையைப் பாதுகாப்பாதேதான்!

தகுதியற்ற சொல்என்றோ தகுதியற்ற மனிதன்என்றோ இயல்பில் யாரும் எதுவுமில்லை. சொல்லப்படும் சூழல்-நோக்கம்தான் சொல்லின் பொருளை ஆழமாக வெளிப்படுத்தும்.

‘மயிர்’ எனும் சொல்லை வள்ளுவரும் உவமையாக்கியிருக்கிறார்
(குறள் 969). அது அசிங்கமாயில்லை.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
கவிதையெனில் முதலில் புரியவேண்டும். பாரதி அப்படித்தான் ‘எளிய பதம். எளிய சொற்கள். பொதுமக்கள் விரும்பக்கூடிய மெட்டு -இவற்றால் ஆகிய காவியம் ஒன்றை செய்து தருகிறவன் தமிழன்னைக்குப்புதிய அணிகலன் சூட்டியவனாகிறான்’, என்று பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையிலேயே பிரகடனப்படுத்திவிடுகிறான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------ 

 

 

No comments: