Tuesday, January 24, 2012

குடியரசுத் தின வாழ்த்து--1 * *

குடியரசுத்  தின  வாழ்த்து  (2012)
-----------------------------------------
இந்தியர்  வென்றோம்
எந்தாய்  நாடு
சேந்தே  செய்தோம்
மக்கள்  அரசு !
மன்னர்  ஆண்டு
அன்னியர்  பறித்து
மீட்க  நீண்ட  ஒலி
உரிமைக்  குரல்  எழுப்பி
படி  பல    கடந்து
இந்நாள் பெற்றோம் !
அதைக்  குடியரசாய்க்
கொண்டாடு  கின்றோம்  மகிழ்ந்து !
அறுபத்தி  ரெண்டு
ஆண்டுகள்  முதிர்ந்தோம்
பல்  துறை  வென்று !
சுதந்திரம்  சமத்துவம்
சகோதரத்துவம்
எனும்  அடித்தளதில்
கட்டிய  சட்ட  திட்ட
வரைவில்  நின்று
வளர்  கின்றோம்
வாத
பிரதி  வாதில்
புதுப்  படி  கட்டி !
கடமை  சொன்ன
சட்டத்தின்  முன்னே
அனைவருஞ்  சமம் !
கொடி  காத்து
எல்லை  காத்து
உறவு  காத்து
உடைமை  காப்பதும்
உயர்த்தி  வைப்பதும்
குடி  மக்கள்
கடமை !
அன்பின்  பயனும்
ஒற்றுமை  உறுதியும்
உழைப்பின்  செல்வமும்
கல்வியின்  உண்மையும்
அறுபத்தி  மூன்றாம்
குடியரசு  காலத்தின்  கனவுகள்
யாவுங்  கனிந்து
மேன்மேலும்  வளர
வாழ்த்தினோம்  வாழ்க !















No comments: