Tuesday, January 1, 2013

புத்தாண்டு

                                    புதிய ஆண்டு 2013
                                   ---------------------------------
மேல்வானும்  கீழ்வானும்  தூவானமாய்  பனிபொழிய
       மல்ர்களும்   இதழ்களும்  துளிஅணிய
நால்திசையும்  நீள்இருளும்  ஆள்அரவம்  மங்கிமறைய
       கால்இல்லா  நாள்நகர்ந்து  நேர்சுழல


மீண்டுமொரு  ஆண்டுருண்டு  கீழ்வானில்  ஒளிபிறந்து
       கதிர்வீச  அதிர்கடலின்  துதியோசை
தோன்றுகிற  சூரியனும்  பழையபாதை  புதியஒளியில்
       புதியவானம்  புதியசூமி  புதியமாருதம்


பொன்பொழியும்  தண்ணொளியில்  கண்விழித்த  பறவைபாட
       மனிதகுலம்  மனமகிழ்ந்து  கைகுலுக்க
இன்பமயம்  இவ்வாண்டின்  விளைவாக,  கடந்தாண்டு
       நடந்தவைகள்  நமைவிட்டோடி  வெற்றியாக


நீதியின்சூரியன்  சோதிவீசும்  மேதினியில்  செல்வவளம்
       பெருகிவந்து  மக்கள்மனம்  குளிரவைக்கும்
ஆதிஆரோக்கியம்  ஆண்டுகொண்டு  புதுப்பெலமும்  புதுமகுழ்வும்
       அனைவருக்கும்  அனுபவமாய்  வந்துசேரும்


காத்திருந்து  ஜெபித்திருப்போர்  கழுகுபெலத்தை  முழுதும்பெற்று
       சிறகடித்துப்  பறந்தெழுவர்  நெஞ்சம்லேசாகி
பாத்திருந்த  நன்மையெலாம்  சேத்துவர  வேண்டுவோம்
       பகையில்லா  உலகத்துப்  பாத்திடுவோம் !
      

 

No comments: