Saturday, January 25, 2014

குடியரசு கொண்டாட்டம் 65

குடியரசுக் கொண்டாட்டம் 65
-----------------------------------
கொடியுடை  படையுடன்
     படிப்படி  நடந்திடும்
        திடமுடை  குடியரசானோம்
குடியரசின்  முடித்தலைவர்
      வடடெல்லித்  தலைநகரில்
         குடியரசுநாள்  தொடக்கவணக்கம்



மறுதினம்  பெருமைதர
      வருகிற  அறுபத்தைந்தாம்
         குடியரசுத்  திருநாளாம்
விருந்தினர்  ஒருவருடன்
      பெருந்திரள்  நிறைந்திடும்
         படைநடை  கலைநிலைகாண்போம்


மங்கல  கீதம்முழங்க
      மஞ்சள்காலை  துலங்க
         பாரதவாசல்  மக்களாக
மங்கல  தீச்சுடருடன்
      அமர  தீபமாகிட
         அமரவீரர்  நினைவாக


முப்படைத்  தலைவரும்
      பாரதத்  தலைவரும்
         வந்து  சேந்திட
மூவண்ணக்  கொடியேற்றம்
      முழங்கிடுங்  குண்டுகள்
         தேசீயகீதம்  இசைத்திட


முப்படைக்  கொடிகளேந்தி
      வானூர்திகள்  வேகமாக
         ஜனாதிபதி  சாலைமேலே
முப்படை  ஆயுதஅணி
      பின்வர  பவனி
         தொடரும் வியப்பிலே


நாட்டுடை  கலைகள்
      கூட்டுடன்  தொடரும்
         பிராந்தியப்  பெருமையாக
காட்டிடும்  தொலைகாட்சி
      கண்ணிமையா  படம்பிடித்து
         விண்ணேற்றும்  உலகெங்கும் !
  





 

No comments: