Saturday, January 25, 2014

கவிதை பற்றி


அசோகமித்திரன்  முன்னோடி எழுத்தாளர்.

எனக்குக் கவிதை குறித்தே பொதுவாக நிறைய சந்தேகம் இருக்கிறது. எப்போதும் எனக்குக் கவிதை குறித்துச் சந்தேகம் உண்டு.

கவிதையைப் புனித வாக்கு என்கிறார்கள். கொஞ்சம் முயற்சி எடுத்தால் யார் வேண்டுமானாலும் அந்தப் புனித வாக்கை எழுதிவிட முடியும்.

இது பொதுவாகக் கவிதை குறித்த உங்கள் அபிப்ராயமா?

ஆம். ஆரம்பத்தில் கவிதை ஏன் அப்படி எழுதப்பட்டது என்றால் எழுதிய அந்தச் சாதனம் வெகுநாள் இருக்காது. ஓலைச் சுவடிகள் 150 வருஷத்திற்குள் உதிர்ந்துபோய்விடும்.

அதனால் மனப்பாடமாக வைத்துக்கொள்வதற்காக எதுகை, மோனை, அலங்காரங்கள் வைத்து எழுதினார்கள்.

மகத்தான படைப்புகள் எல்லாம் இருக்கின்றன. நான் இல்லை என்று சொல்லவில்லை.

கவிதை குறித்த சந்தேகம் தமிழ்க் கவிதைக்கு மட்டுமானதா?

எனக்குத் தெரிந்த மொழியில் இருக்கும் கவிதைகள் எல்லாம் சந்தேகமானவைதாம். நான் கவிதை எழுதியதில்லை.

ஆனால் எனக்கு நெருங்கிய நண்பர்கள் கவிஞர்களாக இருக்கிறார்கள்.

No comments: