Sunday, February 2, 2014

தமிழ்-தமிழர் பற்றி


 
                       
                   தமிழ் இனி தழைக்கும்:

அமெரிக்க குழந்தைளுக்கும் தமிழ் கற்றுத் தரும் பனை நிலம் தமிழ்ச் சங்கம்! சார்ல்ஸ்டன்(யு.எஸ்):

தமிழ் மொழியை அமெரிக்கர்களுக்கும் அறிமுகப்படுத்...தும் முயற்சியில் சார்ல்ஸ்டன் பனை நிலம் தமிழ்ச் சங்கத்தினர் முயற்சி எடுத்து வருகிறார்கள். தமிழ் வரலாற்றில் மிக முக்கிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் உட்பட இந்தியர்களுக்கு தாய் மொழியும், ஆங்கிலமும் தெரிந்திருக்கும். அதே போல் பெரும்பாலான லத்தீன் இனத்தவர்கள் ஸ்பானிஷும் ஆங்கிலமும் அறிந்திருப்பார்கள். சீனர்களுக்கு சீன மொழியும் ஆங்கிலமும் தெரியும். ஒரே மொழி அமெரிக்கர்கள் 1/9 ஒரே மொழி அமெரிக்கர்கள் ஆனால் அமெரிக்கர்களை ஒற்றை மொழியினர் (uniligual) என்று பரவலாக அழைப்பதுண்டு. அதாவது அவர்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும் (மொழியின் பெயரால் அங்கு சண்டை கிடையாது!) முதற்கட்டமாக பள்ளியில் ஒற்றை மொழி அமெரிக்கர்கள் (Uniligual Americans) என்பதை தற்கால அமெர்க்கக் குழந்தைகள் விரும்புவதில்லை. கூடுதலாக ஏதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். இதில் ஸ்பானிஷ் அல்லது சீன மொழிகள் தான் அவர்களுடைய முதல் தேர்வாக இருக்கிறது.

தமிழ் மொழி குறித்து இவர்கள் பெரிதாக அறிந்திருக்கவில்லை. எனவே அமெரிக்க பள்ளிக்குழந்தைகளுக்கு தமிழ் மொழி, அதன் தொன்மையான சிறப்புகள் மற்றும் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் பற்றியும் எடுத்துரைக்கும் முயற்சியை பனை நிலம் தமிழ் சங்கம் முன்னெடுத்துள்ளது.

கூடவே கோலம் வரையவும், கும்மிப் பாடல்கள் பாடவும், வண்ணங்கள் பூசவும் கற்றுக் கொடுக்கிறார்கள். 250 அமெரிக்க மாணவர்கள் – வேட்டி சட்டையில் ஆசிரியர் ஆக்லே ஆல் பள்ளி மற்றும் பியூஸ்ட் அகாடமி மாணவ மாணவியர்களுக்கு தமிழ் மொழி மற்றும் தமிழர்கள் பண்பாடு குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. பனை நிலம் தமிழ்ச் சங்கத்தின் ஹரி நாராயணன் இந்த பாடங்களை நடத்தினார். நிகழ்ச்சியில் 250 அமெரிக்க மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

திருவள்ளுவர், திருக்குறள், தஞ்சை பெரியகோவில் மற்றும் இட்லி தோசை உட்பட தமிழர்களின் பாரம்பரியத்தை பற்றிய விவரங்களை, சில மாணவர்கள் குறிப்பெடுத்துக் கொள்ளவும் செய்தார்கள். அத்தனை மாணவ மாணவியர்களுக்கு மத்தியில் ஹரி நாராயணன், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்து, வகுப்பெடுத்தார்.

இந்த செய்தியை பார்க்கும் போது தமிழை அமெரிக்கர்கள் வெகு விரைவில் கற்று விடுவார்கள் போல் தெரிகிறது . ஆனால் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் தமிழை கற்க மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பது வேதனை.


 


No comments: