Tuesday, May 20, 2014

பதநீர் 8

பதநீர்  8

இடுக்கிய பாளை
அடக்கிய காளை


பயன் எனில்
பார்க்க வேண்டும் தினம்


இடுக்கிய பாளையின்
துடிப்பு அதன்
துளிகளில்
தெரியும்


பதநீர்
துளிகளால்
பேசும்


கலயமும்
இடுக்கியவன்
இதயமும்
குளிரும்


இறுதிவரை
பாளை நீள
இறுதிவரை


 அவன்
பணியும் பக்குவமும்
தொடரும்


காலை மாலை
பாளை முகம்
பாராமல் ஓயான்
நோய் என்றும்
அசதி என்றும்
ஓயமாட்டான்


சீவச் சீவ
கொட்டும் பதநீரோடு
சிநேகமும்


நார் கிழித்து
கண்ணிக் கயிறு
முறுக்கி


கலசக் கழுத்தில் கட்டி

கண்ணிக் கலயம்
என்ற பட்டமும்
சூட்டுவான்


பாளையில் கலசம்
பனைக் கேற்றபடி
நிரம்பும்


நிறைந்த பதநீர்
குறையாமல் காக்க
மூடி போடணும்


ஓலை வெட்டி
கலச வாய் அளவு
மடக்கி


பாளை மேலிருந்து
கலசத்துள் சொருகி
மூடி


காக்கைகள் தள்ளிடாமல்
கட்டுப் போட வேண்டும்


இந்த மூடிக்கு
மடக்கு ஓலை
என்ற நாம்


ஆனாலும்
ஈ எறும்பை
தடை செய்ய
வழி எதுவும்
இல்லை
இன்றுவரை .

No comments: