Thursday, May 29, 2014

பதநீர் 9


பதநீர்  9 /
-----------
பதநீர்
பலநீர் தேங்கிய
பனையுள்ளிருந்து
பதநீர் மட்டும் கறப்பது

பாலுள் நீரைப்
பிரிக்கும் அன்னப் பறவையிலும்
நுண் கலை !

கறந்த பாலை
நிரந்தரம் கெடாமல் காப்பது
மறு கலை !

காயுதப் பட்டம்
வாங்காமலே

ஆயுதந் தீட்டி
கைமேல் பலன் ஈட்டும்

சமூக சேவை
உழைப்பால் களைப்பில்லா

இனிய பதநீர்
தொழிலாளி !

ஓலை மட்டை
கூடிய உயர்

இயற்கை அலுவலகம்
பதநீர்  இறக்கும்
அற்புதம்

செம்மண் பூசிய
களிமண் கலசம்
காவி நிரம்

மழை வீழ் பூமி
மணம்போல

துளி வீழ் கலசம்
மண் வாசமும்
பதநீர் வாசமும்
கலந்து கமழும் !

மந்த மாருத சூழலில்
பனையுங் குளிரும்
பாளையும் உதிர்க்கும்
அதிகத் துளி
டக்..டக்..
சதி தாள வேகமாக

வெயிலும் வறட்சியும்
வந்தால்
துளி சுருங்கி
இனிமை கூடி
கலசத் தூரை மட்டும்
மறைக்கும்
பதநீர் வீழ்ச்சி

முட்டிக் கலசம்
முட்டிய பதநீர்
கட்டியே கிடந்தால்
காற்றும் சூழலும்
கலந்து
பதநீர்
சளித்து புளித்து
கள்ளாகிப் போகும் .

சளிக்காதிருக்க
எளிய வழியுங் கண்டார்
விழிப்புடனே  தொழிலாளி !

குட்டி போடாது
கொஞ்சிப் பாலும்
ஊட்டாத

ஓர் அறிவு மரம்
ஆறறிவு மனுக்குலங் காக்கப்
பதநீர்
தருமென்று
இவர்களுக்கு
எவர் சொன்னார் ?



No comments: