Tuesday, May 6, 2014

தமிழர் பற்றி,

பெரியவர் கோவை ஞானி அவர்களைத் தெரியாதவர் இருக்க முடியாது.அற்புதமான மார்க்ஸீயக் கோட்பாட்டாளர்,ஆசிரியர்,பத்திரிக்கை ஆசிரியர் என பன்முக ஆளுமைகள் கொண்ட நம் காலத்தின் சீரிய சிந்தனையாளர். அவரைப் புதிதாகச் சந்திக்கச் செல்கிற யாருக்கும் ஒருஆச்சரியம் காத்திருக்கும்.அவரைச் சுற்றிலும் அவரது இடுப்பு உயரத்திற்கு
புத்த்கங்களாக அறை முழுவதும் நிறைந்திருக்கும் , இவை சுவரின் அலமாரிகளில் இடம் கிடைக்காத புத்தகங்கள். இதற்குஇடையில்தான் அவர் நடமாட்டமெல்லாம். பார்வை பறிபோன பின்னால்க் கூட நண்பர்களின்... உதவியோடு அவர் படித்ததும் எழுதியதும் ஏகப்பட்டவை. சுமார் 4000த்திற்கும் அதிகமான புத்தகஙகள் அவரது சேகரிப்பில் உள்ளன. சகோதரி முனைவர் மீனாகுமாரி, என்னிடம் சொன்னார்,”ஞானி என்கிற மகா காவியத்தின் பக்கங்கள் தன் கடைசிக் காண்டங்களில் படபடத்துக் கொண்டிருக்கிறது,அவரது சேகரிப்பில் உள்ள அபூர்வமான புத்தகங்களின் மதிப்பு பல லட்சங்கள் பெறும், அதனை தனிநபர்களோ,பெரிய தனியார், அரசு பல்கலைக் கழகங்களோ வாங்கிக் கொள்ளுமானால் அவருக்குப் பேருதவியாக இருக்கும்” என்று. இந்த அரிய பணியை முன்னெடுக்க யாராவது உதவுங்களேன்.

See More

No comments: