பூ.கொ. சரவணன்
56 mins · Chennai ·
தமிழகத்தின் நீர்த்தேவைகள் எங்கு , எப்படிப் பூர்த்தியாகிறது ?மழை எது ? நதி எது ? குளம் எது?அணை எது? கால்வாய் எது ? கண்மாய் எது ? ஊருணி எது ? தண்ணீர் பற்றிய தமிழனின் அறிவு என்ன ?
தமிழ்நாட்டில் 3 வேறுபட்ட காலங்களில் மழை பொழிகிறது . தென்மேற்குப் பருவமழையின் போது (ஜூன் முதல் செப்டம்பர் வரை ) ஒரு சிறிய மழையும் ,வட கிழக்குப் பருவமழையின் போது (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) அதிகபட்ச மழையையும் ,(ஜனவரி முதல் மே வரை) வறண்ட பருவத்தில் ஒரு சிறிய மழையும் தமிழகத்துக்குக் கிட்டுகிறது .சாதாரண சூழ்நிலைகளில் 945 mm (37.2 in) மழை நமக்குக் கிடைக்கிறது .
தமிழகம் பொதுவில் ஒரு வறண்ட பிரதேசமாக இருந்தாலும் , சிலபல வற்றாத ஜீவநதிகளையும் (பாலாறு , செய்யாறு , பொன்னியாறு ,காவேரி , மெய்யாறு , பவானி , அமராவதி , வைகை , சிற்றாறு , தாமிரபரணி ) பல பருவகால நதிகளையும்(வெள்ளாறு , நொய்யல் , சுருளி ,குண்டாறு இன்னபிற) கொண்டுள்ளது .
முன்னொரு காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் , ஊருணிகள் அமைக்கப்பட்டன , வணிகர்கள் , அரசர்கள் எல்லாரும் திருப்பணிக்காக ஊருணிகளும் , அவற்றில் தண்ணீர் வந்து சேர கண்மாய்களும் அமைத்தனர் , இவை அல்லாமல் இவற்றைப் பராமரிக்க , "குடிமரம்மத்து" என்றொரு அருமையான பழக்கமும் இருந்தது . ஆறு குளம் கண்மாய்களைத் தூர்வாற , மக்கள் காசுகேட்காமல் (free labour )வேலை செய்தனர் , இன்று தேசிய ஊரக வேலைத் திட்டம் என்றொரு அருமையான திட்டம் இருந்தும் , நீர்நிலைகள் நீர்வரத்துகள் அனைத்தையும் கூலி வாங்கிக்கொண்டு பராமரிக்கும் வாய்ப்புக் கிடைத்தபின்பும் , நிழலில் நின்றுகொண்டு , வேலையே செய்யாமல் சிலநூறு 'ஓவா'க்களை வாங்கி டாஸ்மாக்கில் அதையும் கரைத்துக் குடிப்பவன் தானே நீ , தமிழா !
வானம் பார்த்த பூமியாம் தமிழகத்தில் ,நீர் மேலாண்மை பற்றிய பழமையான அறிவு இருந்தது , அதனால் தான் , அணைக்கட்டுகள் சிறியதும் பெரியதும் கட்டி , கண்மாய்கள் வெட்டி அவற்றை ஊருணிகளோடு இணைத்து , கிடைத்த மழைநீரை எல்லாம் தேக்கி வைக்கத் தலைப்பட்டான் தமிழன் , இன்று இந்த நீர்நிலைகளை மாசுபடுத்தவும் , பிளாட் போடவும் , ஆக்கிரமிப்புச் செய்வதும் யார் தமிழா ? கொக்ககோலாவா ? இல்லை சக தமிழனா ? மிகக் குறைந்த நீர் வளம் கொண்ட இஸ்ரேல் நீர் மேலாண்மையைச் சரிவரச் செய்து , விவசாயத்தில் தன்னிறைவு அடைந்திருக்கிறதே ? எப்படி , விழும் ஒவ்வொரு மழைத் துளியையும் சேமிப்பதாலும் , விவசாயத்துக்கு உகந்த நுட்பங்களைக் கடைபிடிப்பதாலும் தானே , அட இஸ்ரேலை விடு தமிழா ! இங்கே பக்கத்திலிருக்கிற மகாராஷ்டிரா மாநிலத்தின் ஹிர்வே பஜாரின் கதை அறிந்திருக்கிறாயா ? 1989இல் குடிகாரக் கிராமமாக , வறட்சி தலை கால் உடம்பு விரித்து ஆடிய பிரதேசமாக இருந்த அந்த சின்னக் கிராமம் இன்று நீர் மேலாண்மை மற்றும் சரியான விவசாய உத்திகளைப் பயன்படுத்தி லட்சாதிபதிகளின் கிராமமாக மாறிய கதை தெரியுமா ?பொபட்ராவ் பவார் என்றொரு பஞ்சாயத்துத் தலைவனின் தலைமையில் , மொத்தக் கிராமமும் அங்கிருந்த 22 மதுக்கடைகளையும் இழுத்து மூடிவிட்டு , நீர்மேலாண்மைக்காக , 52 நீர்ச்சேமிப்புக் குளங்கள் , 2 பொசிவுக் குளங்கள் (percolation tanks ) , 32 கல் வரப்புகள் (stone bunds ) , 9 தடுப்பணைகள் எனக் கட்டி எழுப்பியது , கோடிகள் தேவைப்படவில்லை தமிழா ,வெறும் தன்னார்வத் தொண்டும் , சில அரசுத் திட்டங்களின் பணமுமே போதுமானதாக இருந்தது . யாரும் கத்திக் கத்தி வசனம் பேசவுமில்லை , எதிரியை வெளியில் தேடவுமில்லை .பிரச்சினைக்கான காரணம் , மோசமான நீர் மேலாண்மையே என்பதை உணர்ந்து செயலில் இறங்கினார்கள் , சாதித்தும் காட்டினார்கள் .
1995 ல் வருடாந்திர மழை சுமார் 15 அங்குலம் மட்டுமே , தமிழகம் சாதாரணமாகப் பெறுவது 37 அங்குலம் என்பதை கவனத்தில் இருத்து தமிழா ! முதல் பருவமழைக்குப் பின், நீர்ச் சேமிப்பால் , பாசன பகுதி அதிகரித்தது. 2010 ல், கிராமத்தில் மழை 190 மிமீ மட்டுமே கிடைத்தது, ஆனால் நீர் மேலாண்மை நன்கு நிர்வகிக்கப்பட்டதால் , கிராமத்தில் தண்ணீர் பிரச்சினைகள் வரவே இல்லை .
நீர் மேலாண்மை அவர்களைப் பல பயிர்கள் அறுவடை செய்ய உதவியது. 1995 க்கு முன், 90 திறந்தவெளிக் கிணறுகள் 80-125 அடியில் தண்ணீர் கொடுத்தன . இன்று, 15-40 அடியில் தண்ணீர் தரும் 294 திறந்தவெளிக் கிணறுகள் உள்ளன. பக்கத்து அகமத் நகர் மாவட்டத்தில் மற்ற கிராமங்கள் தண்ணீர் அடைய கிட்டத்தட்ட 200 அடி தோண்ட வேண்டி இருக்கிறது .
1995 ஆம் ஆண்டில், பத்தில் ஒரு பாகம் நிலம் மட்டுமே சாகுபடிக்கு ஏற்றதாக இருந்தது, இன்று மொத்த நிலமும் பயிர் செய்யவோ , தீவனப் பயிர் வளர்க்கவோ பயன்படுகிறது . இன்றும் நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் பஞ்சாயத்துத் தலைவர்களும் , உறுப்பினர்களும் , இன்ன பிறரும் ஹிவரே பஜாருக்கு புனிதப் பயணம் போன வண்ணம் இருக்கிறார்கள் .
(புள்ளிவிவரங்களுக்கு நன்றி : தெஹெல்கா )http://www.tehelka.com/one-village-60-millionaires-the-mi…/…
மொத்த இந்தியாவில் ஒரு ஹிவரே பஜார் மட்டும் தானே , அதனால் தான் நம் அட்டைக்கத்தி கலைஞர்கள் கவனத்துக்கு விஷயங்கள் வராமல் வீராணம் குழாய்க்குள்ள போய் உக்கார வேண்டியதாப் போச்சு என இணையப் போராளிகள் கிசுகிசுப்பது கேட்கிறது , அடப் பதர்களா , கண் திறந்து பாருங்கள் , இணையமெங்கும் இதே போல் வெற்றிக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன , பாலைவன ராஜஸ்தானில் , தண்ணீர் மனிதன் என அறியப்பட்ட , மெகசேசே விருது வாங்கிய ராஜேந்திர சிங் என்னும் போராளி , மறைந்த ஆர்வாரி நதியை உயிர்ப்பித்துக் காட்டியது நம் அட்டக்கத்திக் கலைஞர்களின் கவனத்தைக் கவரவில்லை , ஏன்னா அங்க கத்திக் கத்திக் வசனம் பேசி , கொக்கோ கோலா கம்பெனி ரவுடிகளை அடித்துத் துவைத்து , தமிழனுக்கு , அரிப்புக்கு சுகமா சபட் லோஷன் தடவிக் காசக் கறக்க முடியாது பாருங்க .http://sociovigil.in/rajendra-singh-waterman-of-rajasthan/
அது எதுக்குப்பா தமிழா , அடுத்த காந்தி இவருதான்னு நீங்க எல்லாம் டீக்கடைல உக்கார்ந்து பேப்பரும் கையுமா விவாதிச்ச அன்னா ஹசாரேவோட ராலேகான் சித்தி , பாபா ஆம்டேவோட சோம்நாத் மற்றும் ஆனந்த்வன் அப்டின்னு நீ பாக்காத நிஜத் தலைவன்கள், நீர்மேலாண்மை பற்றிப் பக்கம் பக்கமா ,புத்தகம் புத்தகமா பேசியிருக்காங்க . இதெல்லாம் நம்ம பேய்த்தூக்கத்தக் கலைக்கல , ஒரு சினிமா வசனம்தான் நமக்கெல்லாம் மின்னதிர்ச்சி கொடுத்து நம்ம ஞானக் கண்ணத் திறந்து வைக்குது .
Balisana,Bhaonta ,Kolyala, Darewadi,Devgaon,Gandhigram,Guriaya, Jhabua, Mahudi,Mandalikpur , Mangarol, Melaghar, Moti morasal,Onikeri, Pallithode, Raj Samadhyala, Ranapur,Rozam,Sayagata , Saurashtra, Sukhomajri இப்படி இன்னும் எடுத்துக்காட்டுகள் இணையம் , பத்திரிக்கைகள் பூரா கொட்டிக் கிடக்கு தமிழா ,
(http://www.rainwaterharvesting.org)
ஆனா பாவம் நம்ம அட்டக்கத்திக் கலைஞர்களுக்குத் தான் காசு மட்டுமே தெரியிற ஒரு "செலக்டிவ் கம்னாட்டீஷியா" இருக்கு , உன்னிலிருந்து பிறந்த கலைக்கடவுள்கள் உன்ன மாதிரித் தான இருப்பாங்க தமிழா , அதுக்கெதுக்கு ரத்தக் கொதிப்பும் பக்கவாதமும் ஒருசேர வந்த மாதிரிக் கோழை வழியக் , கொக்ககோலா விளம்பரத்துக்கு வந்த தம்பி இப்போ அதே கம்பெனிய எதுத்துப் பேசலாமான்னு , கேணத்தனமா ஒரு கேள்வியக் கேக்குற ? கேட்டு உனக்குப் புத்தி சுவாதீனமில்லன்னு நீயே வெளிக்காட்டிக்கிற !
சரி தமிழா , தூற்றுனவரைக்கும் எனக்கு போரடிச்சிரிச்சு! போற போக்குல கொஞ்சம் கலைச் சொற்கள இங்க தூவிட்டு , நான் கிளம்பறேன் , நம்ம கரைவேட்டி அண்ணன் ஜோக்குல வருமே அந்தத் தம்பி ! ஆங் !!! கோகுல் தம்பி அதுகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ தமிழா ,இதெல்லாம் என்னன்னு , அட அதாம்பா நம்ம கூகுள் தம்பி ...
1. Rooftop rainwater harvesting
(ஒரு ஆண்டில் ஒரு 100 sq.mts வீட்டில் இருந்து 66,000 லிட்டர் தண்ணீர் சேமிக்கலாம் .
இந்த ரீசார்ஜ்டு நிலத்தடி நீர் , ஐந்து உறுப்பினர்கள் கொண்ட சாதாரண குடும்பத்தின் , நான்கு மாத காலத்தியத் தேவைகளுக்குப் போதுமானது )
2. Storm water run-offs management using swales.
3. Creating More Permeable surfaces .
4. Ridge To Valley Approach .
5.Farm ponds
அப்புறம் தமிழா , இன்னும் கொஞ்சம் நிஜ ஹீரோக்களையும் அறிமுகப்படுத்த முயற்சிக்கிறேன் , நமக்குத் தேவை வசனமா , விவேகமான்னு இவங்களப் பாத்து கொஞ்சம் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போடுவாங்களே , அந்த சூடப் போட்டுக்க தமிழா ..http://www.rainwaterharvesting.org/People/Ruraljy.htm
இதெல்லாம் போக , எந்தப் பயிர், எந்த வகை , குறைவாகத் தண்ணீர் கேட்கும் எனப் புரிந்து பயிரிடுவதும் , ஸ்ரீ முறை (SRI -System Of Rice Intensification ,(இப்போது இம்முறை ஏனைய பயிர்களிலும் பயனில் இருக்கிறது ) DSR (Direct Seeding of Rice ) முறை , Micro Irrigation , Crop rotation , Crop Diversification , Organic Farming , Integrated farming இவை பற்றியெல்லாம் நம் விவசாயிகளுக்கு , கழுத்து நரம்பு புடைக்காம , பெப்சிகாரன குறை சொல்லாம பாடம் எடுத்து கொஞ்சம் புரிய வை தமிழா !
முடிவாய் ஒன்றே ஒன்று தமிழா : நம் பிரச்சினைகளுக்குக் காரணங்களும் , காரணிகளும் நமக்கு வெளியில் இல்லை , நமக்குள்ளேயே தான் இருக்கின்றன என்பதை உணர் ! நம் தவறுகள் என்னென்ன , நம் நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றம் கொணர்ந்தால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை ஆய்ந்தறி ! வெறுமே வீர வசனங்களும் , பஞ்ச! டயலாக்குகளும் நம் வாழ்வைத் திருத்தி அமைக்கப் போவதில்லை , திறந்த மனதோடு பிரச்சினைகளை ஆய்ந்து , தீர்வுகள் அறிந்து , அதைச் செயல்படுத்தி , நமக்கு நாமே உதவினால் ஒழிய , நமக்கு உய்வில்லை என்பதை உணர் ! அட்டைக்கத்திகளை நம்பி நேரம் , பணம் விரயமிடாமல் , உன் மொண்ணைக் கத்தி மூளையைக் கொஞ்சம் கூர்தீட்டு தமிழா ! தமிழகமெங்கும் ஹிவ்ரேபஜார்களை உருவாக்கு , மக்கள் தலைவர்கள் ,ஒவ்வொரு பஞ்சாயத்திலும் , மக்களுக்குள்ளேயே மறைந்திருக்கிறார்கள் . அவற்றை பொம்மலாட்டத் திரையில் தேடாதே தமிழா !
பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலை எவ்விதத்திலும் ஆதரிப்பது இந்தப் பதிவின் நோக்கமல்ல , அவர்களைவிட பெரிய குற்றவாளி , அடிப்படைப் புரிதலற்ற , அறியாமையிலிருக்கும் நாமே என்பதை வலியுறுத்தவே இந்த ஆதங்கப் பதிவு . தமிழகத்தின் தண்ணீர் தேவையைத் தீர்க்க, விழும் ஒவ்வொரு மழைத் துளியையும் சேகரிக்க வேண்டியதும் , தண்ணீரைச் சரியாய்ப் பயன்படுத்தும் மேலாண்மை உத்திகளுமே ஒரே உறுதியான வழி . "தன்னூத்து"கள் தானே பொங்கி நிரம்புவதில்லை , நீயும் நானும் சேர்ந்து நிரப்பினால் தான் அது காலாகாலத்துக்கும் நிறைந்து நம் தேவை தீர்க்கும் . கொக்ககோலாவும் பெப்சியும் சிறு எதிரிகள் , நீர் மேலாண்மை பற்றிய உன் அடிப்படை அறிவின்மையே பெரும் எதிரி ! - Alex Paul Menon

No comments:
Post a Comment