Tuesday, January 13, 2015

பொங்கல் வாழ்த்து-2015.

   பொங்கல் நல் வாழ்த்துக்கள்
   -------------------------------
தைதோறும்  கைகோர்க்கும்
      தமிழ்பொங்கல்  தலைமுறைசெல்
கைப்பொங்கல்  மெய்யின்பம்
      செய்பொங்கல் வெல்லப்பொங்கல் !


ஏர்உழவர்  சேர்உழத்தி
      நேர்உழைப்பில்  சேர்பொங்கல்
கார்கால  மார்கழிபோய்
      வழிபிறக்கும்  ஒளிப்பொங்கல் !


இஞ்சிமஞ்சள்  கொஞ்சுகைகள்
      புத்தரிசி  செங்கரும்பு
மிஞ்சுசுவை  அங்கமாக
     செஞ்சபொங்கல்  மங்கலக்கை !


அன்புமயம்  இன்பசுகமாய்
      ஆழிசூழ  வாழ்தமிழர்
உன்னதவாழ்வும்  இன்னல்போக்கும்
      என்பொங்கல்  இன்வாழ்த்து !

No comments: