Monday, March 23, 2015

பதநீர் 13 *

பதநீர்  13

ஆழ் தரை
உறிந்து


நீள் வான்
சொரிந்து


தேன் சுவைத் தெளி நீர்
பனை நீர்
அது
பதநீர்  !


சிறு துளி சேர்ந்து
இராப் பகல் திரண்ட
பதநீர் திரிந்தால்
பொங்க்ங் கள்


பக்குவங் காக்க
அனுபவங் கண்ட
அரு மருந்தே
சுண்ணாம்பு


மட்டை வெட்டி
தல்லிச் சதைத்து
தூரிகையாக்கின்
பெயர்
கலக்கு மட்டை



சுண்ணப் பொடி தொட்டு
கலசத்துள் தடவி
பழுதடையா பதநீராய்க்
காப்பது
படி பல கடந்த
பரம்படைத் தொழில்
நுட்பம்


தாய் கைச்
சமயல்
உப்பு உறைப்பு
கலப்பின் சுவையாய்
பதநீல் அளவும்
சுண்ண அளவும்
சரி விகிதம் அமையும்


கூடின் சுண்ணாப் பால்
குறைந்தால் சளிக்கும்


கூடின்
வெயில் காற்று


குறையும்
துளி விழு வேகம்
அளவும்


வந்த மந்த மாருதம்
பருந் துளி
பெரும் பட படப்பைக்
கூட்டிவிடும்


பொருளைப் பாத்து
சேர்ப்பது
சமையல் உப்பு


பாரா பதநீருக்கோ
பாளை முகம் பாத்து
வரப் போகும் பதநீருக்கு
கணித்துக் கலக்க வேண்டும்
சுண்ணம்


அது அவர்
கலைக் கை நுட்பம்


யானைக்கு மட்டுந்தானா
தன் பலம் தெரியாத்து ?


இவர்கள் என்னவாம் !!!











No comments: