Monday, March 23, 2015

சிறப்புச் செய்தி (23/03/2015)

                                       திராவிடம் என்ற சொல்

மேலும் திராவிடம் என்ற சொல் தமிழிலிருந்து திரிந்து பிறந்தது என்பதைக் காண்போம். 'அறிஞர் கிரையர்சனின் கருத்தை,
தமிழ்,தமிழ், த்ரமிள, த்ரமிட, திரவிட என்று தமிழின் திரிபே திராவிடமாயிற்று. பவழம் என்னும் தமிழ்ச்சொல் ப்ரவாளம் என்று வடமொழி ஆசிரியர்களால் திரித்து வழங்கப்பட்டுள்ளதைப் போலவே தமிழும் திரித்து
வழங்கப்பட்டது.
என மேற்கோள் காட்டுவார் சே. இராசேந்திரன்....
மேலும் இந்த மாற்றம் எந்த மொழியிலிருந்து தொடங்கியது என்பதை,
பிராகிருத மொழியில் . தமிழ் எனும் சொல் சிதைந்து
திரமிளம் என்று வழங்குகிறது. அந்தப் பிராகிருதச் சிதைவுச்
சொல்லே திராவிடமாயிற்று என்பது 'இந்தியாவின் சமயங்கள்' எனும் நூலாசிரியரான எ.பி.கார்மார்கார் என்பாரின் கூற்றாகும்.
எனவும் மேற்கோள் காட்டுவார். மொழிஞாயிறு பாவாணரும், வடநாட்டு ஆரிய (சமற்கிருத) நூல்களில் திராவிடம் என்னும் சொல் முதலாவது த்ரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியில் இல்லை.சில உயிர்மெய் முதல்களை ரகரம் சேர்த்து த்ர ,ப்ர என புணர் எழுத்துக்களாகத் திரிப்பது வடநூலார் வழக்கம். எ(டுத்துக்)கா(ட்டு): படி-ப்ரதி, பவளம்-ப்ரவளம். இதனால் தமிழம் என்னும் சொல் த்ரமிளம் எனத் திரிந்தது இயல்பே. பின்பு அது நாளடைவில் த்ரமிடம், த்ரவிடம், எனத் திரிந்தது. ள -ட, ம,வ போலி. த்ரவிடம் என்பது மெய் முதலாதலின் தமிழில் திரவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகிறது.எனத் தமிழம் என்பதே த்ரமிளம்-திராவிடம் எனத் திரிந்ததாகக் குறிப்பார்.(இந்தியச் சமூகப் புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை )
இவ்வளவுக்கும் பிறகுத் திராவிடம் என்பது மாயை என்றோ அல்லது அது ஒரு குறிப்பிட்ட இயக்கத்துக்கு மட்டுமே உரியது என்றோ அல்லது பேசவோ,எழுதவோ கூடாத சொல் என்றோ கூறுவோரிருப்பின் அது அவரின் வஞ்சகப் பின்னணி பெற்றெடுத்த செத்துப் பிறந்த சதைப் பிண்டம் என்றுதான் கூலுதல் வேண்டும். மேலும் தமிழ்ச் சொல் வரிசையில் தீண்டத்தகாத சொல் என்று ஒரு சாதிச் சொல்லை உருவாக்கும் வெறிஎன்றே அதனைக் கொள்ள வேண்டும்.

No comments: