Friday, May 29, 2015

சிறப்புச் செய்தி(29/5/2015)

 
உலகில் அதிகமானவர்கள் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள் - 220 கோடிப்பேர். அதாவது உலக மக்கள்தொகையில் 32 சதவீதத்தினர்.
அடுத்த பெரிய மதம் இஸ்லாம். 160 கோடிப்பேர் அந்த மார்க்கத்தை ஏற்றவர்கள். 23 சதவீதம்.
இந்துக்கள் 100 கோடிப்பேர் இருக்கிறார்கள். 14 சதவீதம்.
...
புத்த மதத்தினர் 50 கோடிப்பேர் உள்ளனர். 7 சதவீதம்.
மற்ற மதங்களைச் சேர்ந்தோரின் எண்ணிக்கை இதற்குப் பிறகுதான் வருகிறது.
உலக மக்கள்தொகையில் 16 சதவீதத்தினர், 110 கோடிப்பேர், அதாவது எண்ணிக்கை வரிசைப்படி மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் யார் தெரியுமா?

நாத்திகர்கள், மதநம்பிக்கை இல்லாதவர்கள். கடவுள் எனப்படுகிறவர்தான் இந்த உலகத்தைப் படைத்தார் எனக்கூறி, இங்குள்ள ஏழை-பணக்காரர் ஏற்றத்தாழ்வுகள், சாதி-மத வேறுபாடுகள், பாலின ஒடுக்குமுறைகள் அனைத்துக்கும் இல்லாத ஒருவர் மீது பழி போடாதவர்கள்.

(ஆதாரம்: 2012ல் ‘பியூ ஃபோரம் ஆன் ரிலீஜன் அன் பப்ளிக் லைஃப்’ என்ற ஆய்வுக்குழுவால் 230 நாடுகளில், 2,500 மக்கள்தொகை கணக்கெடுப்புகளை ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு)

No comments: