Saturday, June 20, 2015

சிறப்புச் செய்தி ( 20/6/2015 )


John Bosco

மனித எண்ண அலைகள் பிரபஞ்சத்தின் நியதி.

மனித எண்ண அலைகள் பிரபஞ்சத்தின் நியதி.
மனித வாழ்வில் ஒருவருக்கொருவர் வித்தியாசமாகவும் எண்ண அலைகளின் மாறுதல்களுடன் தான் வாழ்ந்து வருகிறார்கள். இது பிரபஞ்சத்தின்... நியதி. ஒவ்வொரு ஜீவராசிகளும் பிறக்கும்போது கிரகங்களால் அணுவில் மாறுதல் ஏற்படுவதால்தான். ஒருவருரை மற்றவர் விரும்புவதற்கும், ஒருவருரை இன்னொருவர் வெறுப்பதற்கும் காரணம்,
ஒரு கூட்டத்தில் பல பேர் கூடி நின்றாலும் நமக்கு ஒரு சில பேரை மட்டுமே பிடிக்கின்றது. ஒரு சில பேரை அறவே பிடிக்காமல் போகின்றது. ஏன் இவ்வாறு நிகழ்கிறதென்றால் உடல் அமைப்புகளின் மாற்றம், எண்ண அலைகளின் மாற்றம், சுற்றுபுற சூழ்நிலை இவற்றைப் பொறுத்து சிந்தித்து செயல்படுவதல்தான் அந்த நிலைகள் அமைந்து விடுகின்றன. இதற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளும் காரணமாகின்றன.
ஒரு மனிதனுக்கு இருக்கும் எண்ண அலைகள் இன்னொரு மனிதனுக்கு இருப்பதில்லை. இதுவும் கிரகங்களின் செயல்பாடுகள் தான் காரணம். இதைத்தான் முன்னோர்கள் கர்மபலன் என்றார்கள். கர்ம பலன் என்பது ஒவ்வொருவரும் கருவில் உருவாகும்போது ஏற்படும் கிரக அலைகளின் தாக்கத்தைப் பொறுத்து அமைகிறது.
அதே போல அவர் அவருக்கு தொடர்புடைய கிரக நிலைகளின் தன்மையைப் பொறுத்து மனிதனுடைய நாடி நரம்புகள், தசை தமனி இவற்றினுடைய செயல்பாடுகள் அமைகின்றன.
அதே போல எண்ண அலைகள் மூளை நரம்புகளில் இயங்கிச் செயல்படவும், ஆரோக்கிய செயல்பாடுகளுக்கும் தீய செயல்களுக்கும் அவரவர்களை இயக்குகின்ற கிரகங்களின் காரணத்தால்தான் அமைந்து விடுகின்றன.
இதைத்தான் முன்னோர்கள் சாஸ்திர சம்பிரதாயம் மூலமாக சொல்லியிருக் கின்றார்கள். அறிவை அறிவால் அறிபவன் மனிதன். ஆனால் அதே வேளையில் இதற்கு காரணம் கிரக நிலைகள்தான் என்பதை தெளிவாக முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
உடல் அமைப்பில் உள்ள வாத பித்த கபம் என்று மூன்று உடற்கூறு அம்சங்களில் பல தத்துவங்கள் அடங்கியுள்ளதை அறியலாம். அதில் அகத்தியர் வாதத்தை சிவனென்றும் பித்தத்தை பிரம்மா என்றும் கபத்தை விஷ்ணு என்றும் குறிப்பிடுகின்றார். அப்படிப் பார்க்கும்போது விஷ்ணு என்ற மூலக்கூறு அம்சம் இந்த வாதபித்தகபத்தில் உள்ளடங்கியது.
வாதமானது பித்தத்திற்கும் கபத்திற்கும் நடுவிலும் கபமானது உட்பாகத்திலும் அதற்கு மேல் பித்தமானது மேல் வட்டப் பாதையிலும் சுழன்று கொண்!டிருக்கிறன. இதுதான் உடற்கூறு. இதனால்தான் அண்டத்திலிருப்பது பிண்டத்திலும் இருக்கிறதென்று சித்தர்களின் மருத்துவக் கூறுகள் அனைத்தும் இதையே கூறுகின்றன. அணுவின் சாரமும் இதுதான்.
ஆக அணுவில் மூன்று அங்கங்களில் நடுவிலிருப்பது விஷ்ணு என்ற கபம் ஆகும் (சூலைநீர்). அந்த நீரின் தத்துவக்கூறானது விஷ்ணு என்ற பரிணாமத்தில் வியாபிக்கின்றது. அந்த விஷ்ணு என்ற பரிணாமம் ஆன்மீக ஐதீகத்தில் நானின்றி அசைவில்லை என்றும் எல்லா இயக்கங்களும் நானே என்கின்றது. அதன் ஆகம விதி சரிதானா, எந்தளவு உண்மை என்ற ஆராய்ச்சியில் பார்க்கும்போது அணுவில் உள் பாகத்திலிருக்கும் கபம் என்ற விஷ்ணு என்ற அம்சக்கூறு மாறிவிட்டால் அதைச் சுற்றியுள்ள வாதமும் பித்தமும் வட்டப்பாதையில் பிறழ்ந்து அணுவானது சிதைந்து முக்குற்றத்தின் பிரளயம் நிகழ்ந்துவிடுகின்றது. அவ்வாறு பிரளயம் ஆகும்போது உடலானது வியாபித்து தன் நிலை மாறி இன்னொரு நிலைக்கு சென்றடைந்து உயிர் பிரியும் நிலை வந்துவிடுகின்றது. இதைத்தான் காலன் எமன் தூதன் என்றார்கள்.
மூன்று சக்திகளும் (சிவன் பிரம்மா விஷ்ணு) பிரளயமாகின்றது. அப்போது கிரகங்களுடைய சேர்க்கைகளும் மாறுகின்றன. இதைத் தான் தெய்வ நிலை என்று சொல்லி வைத்தார்கள். ஆகையால் தான் „உன்னையே நீ அறிவாய்…என்று எல்லா மத ஞானிகளும் கூறியுள்ளனர். அண்டத்திலிருக்கின்ற வாத பித்த கபம் என்ற முக்குற்ற பிரளயத்தில் உடலானது நிலைமாறி உயிர் பிரிவது
ஆனாலும் இயக்குகின்ற கிரகங்கள் ஒரே வட்டப்பாதையில் தான் சுழல்கின்றன. ஆனாலும் கதிர் இயக்க நிலைகளினால் தன் நிலை மாறிவிடுகின்றன.
அதேபோல் மனிதர்கள் உருவத்தில் ஒன்றுபோல தோன்றினாலும் நடை உடை பாவனைகளில் மாறுபாடுகின்றனர். இது எப்படி மாறுகின்றது என்று பார்க்கும்போது சுழற்சியின் வேகமும் அதிலிருந்து வரும் பிரபஞ்சத் துகள்களும் வித்தியாசமாய் அமைவதே காரணம். இதை உற்று உணர்ந்த சித்தர்கள் அண்டத்திலிருப்பதுதான் பிண்டமென ஒரே வரியில் சொல்லிவிட்டனர்.
நாம் தெரிந்துகொண்டுள்ள பிரபஞ்ச நிலையின் உள் உணர்வுகள்தான் உலக ஜீவராசிகளின் செயற்பாடுகள். ஆக பிரபஞ்சத்தின் செயற்பாடுகளை மனிதர்கள் உணர முடியுமே தவிர அதன் செயல்பாடுகளின் தத்துவங்களைத் தெளிவடைந்து ஒருபோதும் அறிய முடியாது.
இதுபோன்ற ஆழ்ந்த விஷயங்களை தத்துவஞானிகளும் சித்தர்களும் மகான்களும் இயற்கையைப் பற்றி நன்கு அறிந்த வல்லுநர்களுமே மனிதகுலம் அறியாத மகத்துவங்களையும் தத்துவ சிந்தனை களையும், சித்தாந்தங்களையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
சித்தர்களின் ஆற்றல் வலியது. அவர்கள் தான் உலக பிரபஞ்ச சக்தியை தெரிந்து வைத்துள்ளார்கள். பிரபஞ்சத்தின் நிலைபாடுகளில் சரநிலை சுவாசம் மிக முக்கியம். சரநிலை சுவாசம் தெரிந்தவர்கள் ஞானிகளாகவும், மகான்களாகவும் ஆக முடியும். இது தான் பிரபஞ்சத்தின் உண!மை நியதி. இதுவே தத்துவ சராம்சமாக பிரபஞச்த்தில் நிலைத்திருக்கிறது.

No comments: