Sunday, June 28, 2015

சிறப்புச் செய்தி (28/06/15)

முன்னோர்கள் ஏன் மண்பானையில் சமைத்தார்கள் தெரியுமா?

மண்பானை சமையல்(பஞ்சபூத சக்தி) - அறுசுவை உணவு
இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு இவையே அறுசுவை. அறுசுவைகள் முறையே,மண், காற்று, நீர், ஆகாயம்... நெருப்பு என ஐந்து மூலக சக்திகளைத் தன்னகத்தே கொண்டவை.
நமது உடலின் முக்கிய கருவிகள் பன்னிரண்டு அவை,
இனிப்பு (மண்) - வயிறு, மண்ணீரல்,
துவர்ப்பு, கார்ப்பு (காற்று) - பெருங்குடல், நுரையீரல்
உவர்ப்பு (நீர்) - சிறுநீர்ப்பை. சிறுநீரகங்கள
புளிப்பு (ஆகாயம்) - பித்தப்பை, கல்லீரல்,
கசப்பு (நெருப்பு) - சிறுகுடல், இதயம், உடல் வெப்பக் கட்டுப்பாட்டமைப்பு, இதய உறை – இந்த முக்கியக் கருவிகளின் கட்டுப்பாட்டில் உடல் முழுமையும் உள்ளது. மூளை இக்கருவிகளின் தேவைகளுக்காக இயங்கும் கருவியே. உடலின் நல்லது கெட்டது இந்த கருவிகளின் செயல் திறனைப் பொறுத்தே அமையும்.
இந்த பன்னிரண்டு முக்கிய கருவிகளும் முறையே ஐந்து மூலக ஆற்றல்களின் வழிபட்டவை. இவற்றுக்குத் தேவையான சத்தியை அறுசுவைச் சத்தி மூலமாகவே பெறுகின்றன.
நமது உணவில் இச்சுவைகளில் ஒன்றின் தன்மையுள்ள உணவு இல்லாவிடில் அந்த சுவையால் இயங்க கூடிய முக்கிய கருவியின் இயக்கத்துக்கு தேவையான தூண்டுதலும் சத்தியும் கிடைக்காது. அதன் காரணமாக மொத்த உணவின் சீரணமும் சீர்கெடும்.

உதாரணமாக நாம் உண்ணும் உணவில் இனிப்புச் சுவை இல்லையெனில் வயிறு –மண்ணீரல் இரண்டுக்கும் தேவையான இயக்க ஆற்றல் இருக்காது மேலும் இனிப்புச் சுவையைச் சீரணிக்கக் கூடிய சுரப்பிகள் எதுவும் சுரக்காது வயிறு மண்ணீரல் அனியமாக இல்லாத நிலையில் இரைப்பையின் உள்வரும் உணவினைச் சீரணிக்கத் தேவையான சுரப்பிகள் சரிவரச் சுரக்காமல் நீண்ட நேரம் இரைப்பையினுள் கிடக்கும் உணவு கெடும். அது அடுத்தடுத்துச் சாப்பிடும் பொழுது கட்டாயமாகத் தள்ளப்பட்டுக் கெட்ட சக்தியாக, கழிவாக மாறும்.
இந் நிலையில் சாப்பிட்ட உணவு தரமான உணவுச்சத்தியாக - குளுக்கோசாக மாறாது; கெட்ட உணவுச்சத்தியாக –கெட்ட குளுகோசாக மாறுகிறது. எனவே, இதை உடல் ஏற்றுக் கொள்வதில்லை, புறக்கணிக்கிறது.
அதாவது, உணவுச்சத்தியை செல்களுக்குக் கொண்டு சேர்க்கும் கணையநீர் சுரப்பதில்லை. தரமான உணவுச்சத்தியை மட்டுமே உடல் ஏற்றுக் கொண்டு கணைய நீரைச் சுரக்கும். இல்லையெனில், அதைப் புறக்கணித்துக் கழிவாக்கி வெளித் தள்ளிவிடும்.
இது போல் தான், அறுசுவைகளில் எந்த சுவை குறைந்தாலும் சீரணம் கெட்டுப்போகிறது. உடல் செல்களுக்குத் தேவையான உணவுச் சத்தி கிடைக்காததால் செல்கள் வலுவிழக்கின்றன. அதன் காரணமாகவே அனைத்து நோய்களும் ஏற்படுகின்றது. நமது உடலின் பல்லாயிரம் கோடி செல்களுக்கும் தேவையான உணவுச் சத்தியை, ‘அறுசுவை உணவுகளை சுவைத்து உண்பதால் மட்டுமே’ பெறமுடியும்.

No comments: