கரும்புச்சக்கையிலிருந்து வீரியமிக்க மது செய்ய்லாம் என்பதை 1657 -ல் ரம்புல்லியன் என்பவர் கண்டுபிடித்தார் .
குடித்தவுடன் வெறிக்கச் செய்யும் அந்த மதுவின் பெயர் ரம...ஆனது .
அடிமைகளைப் பிடிப்பவர்களுக்கு ரம் விலையாகத் தரப்பட்டது .
தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்த காலப் பட்டியல் இங்கே
1937-1973= 36 வருடங்கள் தீவிர மது விலக்கு அமலில் இருந்த காலம் [பெர்மிட் ஹோல்டர் மட்டுமே மது அருந்த முடிந்த காலம்] ஏனையோருக்கு கள்ள சாராயம் தான் கதி
1971–74=3 வருடங்கள் தமிழக அரசு மது விற்பனைக்கு அனுமதித்த காலம்
இக்காலத்தில் கள்ளுக்கடைகளும், சாராயக் கடைகளும்,பிராந்திக் கடைகளும் பார்களும் இயங்கின.
1975-1982= 3 வருடங்கள் தமிழக அரசு மது விற்பனையை தடை செய்திருந்த காலம் [வெளிநாட்டு மது விற்ற பிராந்திக் கடைகள் மட்டும் உண்டு குடிக்க பார்கள் கிடையாது பொது இடங்களில் எங்கு வைத்தும் மது அருந்தக் கூடாது]
1983–87=4 வருடங்கள் தமிழக அரசு மது விற்பனைக்கு அனுமதித்த காலம்
இக்காலத்தில் சாராயக் கடைகளும்,பிராந்திக் கடைகளும் பார்களும் இயங்கின.
1988–90=2 வருடங்கள் தமிழக அரசு மது விற்பனைக்கு அனுமதித்த காலம்
இக்காலத்தில் ஒயின்ஸ் ஷாப்கள் மட்டும் இயங்கின,பார்கள் கிடையாது. கள்ளுக்கடை, சாராயக்கடைகளுக்கு அனுமதி இல்லை.பொது இடங்களில் எங்கு வைத்தும் மது அருந்தக் கூடாது
1990–91 =1 வருடம் தமிழக அரசு மது விற்பனைக்கு அனுமதித்த காலம்
[இந்த காலகட்டத்தில் தான் உறை என்று அன்புடன் அழைக்கப்பட்ட மலிவு விலை அரசு பாக்கெட் சாராயக் கடைகள் ஊரெங்கிலும் திறக்கப்பட்டன, பல்லாவரத்திலேயே 4 கடைகள் இருந்தன,இது தவிர ஒயின்ஸ் ஷாப் கடைகளும் பார்களும் நிரம்ப உண்டு,குடிகாரர்களுக்கு கொண்டாட்டமான காலகட்டம் இது]
1992-2000 எட்டு வருடங்கள் தமிழக அரசு மலிவு விலை மதுக்கடைகளை மூடிவிட்டு தனியார் ஒயின் ஷாப்களையும் பார்களையும் மட்டும் நடத்த அனுமதித்த காலம்,
2001-2002 வரை=2 வருடங்கள் தமிழக அரசு தனியார் ஒயின் ஷாப்களையும் பார்களையும் மட்டும் நடத்த அனுமதித்த காலம்,
2003-இன்று வரை=சுமார் 12 வருடங்களாக தமிழக அரசே டாஸ்மாக் என்ற பெயரால் ஒயின் ஷாப்களை நடத்தி வரும் காலம்
அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய்
குடித்திட்டால் அறிஞன் இல்லை உணர்ந்திடுவாய்
இலவசமாகக் கிடைத்தாலும் என்றும் குடிக்காதே
சிறப்புகள் இருந்தும் சிதைக்கப்படுவாய்
சிறிது குடித்தாலும் சீரழிந்துப் போவாய்
No comments:
Post a Comment