Saturday, July 25, 2015

சிறப்புச் செய்தி (25/7/15)

வாழை இலை சாப்பாடு ஏன்?

வாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும், வாழை இலை ஒரு கிருமிநாசினியாக செயல்பட்டு, பாதிப்பின் தன்மையை குறைக்கச் செய்துவிடும். மேலும் வாழை இலையில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், கால்...சியம், மெக்னீசியம், சோடியம் உள்பட பல வகையான சத்துக்கள் நாம் உண்ணும் உணவுடன் கலந்து விடுகின்றன.
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்?
சாப்பாட்டுத் தட்டு தரையில் இருப்பதால், நாம் இயல்பாகவே குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால், வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து அமிலம் சுரந்து, நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைக்கிறது. சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

No comments: