மனிதன் முக்கியமான மூன்று கூறுகளின் ஒருங்கிணைப்பு
1. துல சரீரம் = பஞ்சபூத உடல்
2. சூட்சம சரீரம் = ஆத்மா
3. காரண சரீரம் = பூலோக பணி (குணநலங்கள்)
இந்த மூன்று கூறுகளும் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும்

திருமணப் பொருத்தம் பற்றி தெரிந்து கொள்வோம்
'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்', 'கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்' என்று சான்றோர்கள் சொல்லி வைத்துள்ள...னர். ஆயிரம் காலத்துப் பயிர் எனப்படும் திருமண வாழ்வு சிறக்க முன்னோர்கள் சில வழிமுறைகளை கடைப்பிடித்தனர்.

பணப்பொருத்தம் பார்ப்பதை விட மனப் பொருத்தமும், மண் பொருத்தமும், மங்கல நாண் சூட நட்சத்திரப் பொருத்தமும் பார்க்க வேண்டும் என்று கண்டறிந்தனர். இந்த நட்சத்திரப் பொருத்தங்கள் வாயிலாக நாம் வரனைத் தேர்ந்தெடுக்கலாம் என முன்னோர்கள் கண்டறிந்தனர்.
எனவே திருமணம் பேச முன்வரும் போது முதலில் நட்சத்திரப் பொருத்தம் நன்றாக இருக்கிறதா என்று ஜாதகம் பார்த்து அதன்பிறகு வரன்கள் ஜாதகத்தில்
தசாபுத்தி சந்திப்பு இருக்கிறதா?
தோஷங்கள் உள்ளதா?
செவ்வாய் தோஷம், சனி தோஷம், சர்ப்ப தோஷம் மற்றும் கிரக தோஷங்கள் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
இதில் அதிக பொருத்தம் அமைந்த வரனை பரிசீலித்து திருமணம் செய்தால் வாழ்க்கை வசந்தமாகும் இல்லறம் நல்லறமாகும்.
வருத்தமில்லாத வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் திருமணப் பொருத்தங்கள் மொத்தம் பத்தாகும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தை முன்னிட்டு பொருத்தத்தை குறிக்கும். இந்தப் பத்துப் பொருத்தங்கள் நீங்கலாக கிரக தோஷங்கள் இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரத்தை எண்ணிப் பார்ப்பது வழக்கம்.
குறிப்பாக கணப் பொருத்தம் என்பது ஒருவரின் குணத்தைக் குறிக்கும். ரஜ்ஜூ என்பது மாங்கல்யப் பொருத்தம், மகேந்திரம் என்பது புத்திர பாக்கியத்திற்குரிய பொருத்தம். இவற்றைப் போல ஒவ்வொரு பொருத்தமும் ஒவ்வொன்றைக் குறிக்கும் விதத்தில் உள்ளது. இவற்றில் முக்கியப் பொருத்தங்கள் பலவும் பொருந்தியுள்ளதா என்று பார்த்து முடிவெடுப்பது நல்லது.
இந்தப் பத்துப் பொருத்தங்கள் நீங்கலாக மற்ற பொருத்தங்களையும் தம்பதியர்கள் இருவருடைய ஜாதகத்தையும் வைத்துப் பார்த்து தசாபுத்தியறிந்து பிறகு திருமணம் செய்ய முடிவு செய்தால் முத்தான வாழ்க்கை மலரும். முன்னேற்றமும் கிட்டும்.
திருமணப் நட்சத்திர பொருத்தம் பத்து எவை எவை?
1. தினம், 2. கணம், 3. மகேந்திரம், 4. ஸ்தீரி தீர்க்கம், 5. யோனி,
6. ராசி, 7. ராசிஅதிபதி, 8. வசியம், 9. ரஜ்ஜூ, 10. வேதை
1.தினப்பொருத்தம்
தினம் என்றால் நட்சத்திரம் எனப் பொருள். நாள் தோறும் சந்திரபகவான் தங்கும் இடம் அல்லது ஷேத்திரம். அதுவே நாள் ஷேத்திரம் இது மருவி நட்சத்திரம் என ஆகியது. எனவே இந்த தினப்பொருத்தம் முக்கியமான ஒன்று. நட்சத்திரங்கள் 27 ஆகும்.
பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம்.
2.கணப்பொருத்தம்
கணம் என்றால் கூட்டம் என பொருள்படும். மூன்று வகை கணங்களாக அல்லது கூட்டமாக 27 நட்சத்திரங்களும் பிரிவினை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இருவரின் இல்லற சுகம், ஒற்றுமை இவை தீர்மானிக்கப்படும்.
தேவ கணம் & மனுஷ கணம் & ராட்சஸ கணம் என மூன்று வகைப்படும்.
தேவகணம் - அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுசம், திருஓணம், ரேவதி
மனுஷகணம் - பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி
ராட்சஸகணம்- கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சத்யம்
தேவ கணத்தினருக்கு மனோபலம் உண்டு. ராட்சஸ கணத்தோர் உடல் பலம் மிக்கவர். மனுஷ கணம் இருபலரும் உண்டு. பெண்- ஆண் நட்சத்திரங்கள் ஒரே கணமெனில் உத்தமம். இரண்டில் ஒன்று தேவகணமும் மற்றும் மனுஷ கணமெனில் உத்தமம். பெண் தேவகணம் - ஆண் ராட்சஸ கணமெனில் மத்திமம், பெண் ராட்சஸ கணம் - ஆண் தேவகணம் & மனுஷ கணம் பொருத்தமில்லை.
3.மகேந்திர பொருத்தம்
புத்திம விருத்தி தரும் பொருத்தம் இரு பெண்ணின் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் வரை எண்ணிய தொகை 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆவது எனில் மகேந்திர பொருத்தம் உண்டு எனலாம். மற்றவை பொருத்தமில்லை. இப்பொருத்தம் அவசியமே. ஆனால் முக்கியமானது அல்ல. இப்பொருத்தம் இல்லையெனில், ஜாதகங்களில் புத்திரஸ்தான பலனைக் கொண்டு ஜோதிடர் தீர்மானிப்பார்.
4.ஸ்திரி தீர்க்கம்
பெயரே சொல்கிறது. பெண்ணின் தீர்க்கம் அல்லது ஆயுள், ஆரோக்கியம் ஆணின் நட்சத்திர தொடர்பால் எவ்விதம் மாறுபாடு அடைகிறது. என்பதை சொல்லும்! பெண் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் ஏழுக்குள் எனில் பொருத்தம் இல்லை. ஏழுக்கு மேல் பதிமூன்று வரை எனில் மத்திம பொருத்தமே. பதிமூன்றுக்கு மேல் என்றால் உத்தமம். இப்பொருத்தம் இல்லையெனிலும் பெண் ஜாதகத்தின் ஆறாம் ஸ்தானம் அல்லது எட்டாம் ஸ்தானம் அல்லது ஆண் ஜாதகத்தில் பணிரெண்டாம் ஸ்தானம் அல்லது இரண்டாம் ஸ்தான பலம் மூலம் ஜோதிடர்கள் தீர்மானிக்க இயலும்.
5.யோனிப் பொருத்தம்
இது முக்கியமான ஒன்றாகும். தாம்பத்ய உறவின் சுகம், திருப்தி நிலை இவற்றை தீர்மானிக்கும் அளவுகோள் எனலாம். ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறை இது. நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆ& பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது. உத்திராடம் நட்சத்திரம் மட்டும் கீரி எனவும் சில சாஸ்திர நூல்கள் மலட்டு பசு எனவும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு. ஆண்&பெண் பகை மிருகமெனில் மட்டுமே பொருத்தமில்லை எனலாம். ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் எனினும் உத்தமே! பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகம்' என்றாலும் உத்தமமே. பகை மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது. மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும் இது முக்கியம்.
01. அசுவினி - ஆண் குதிரை
02. பரணி - ஆண் யானை
03. கார்த்திகை - பெண் ஆடு
04. ரோகிணி - ஆண் நாகம்
05. மிருகசீரிஷம் - பெண் சாரை
06. திருவாதிரை - ஆண் நாய்
07. புனர்பூசம் - பெண் யானை
08. பூசம் - ஆண் ஆடு
09. ஆயில்யம் - ஆண் பூனை
10. மகம் - ஆண் எலி
11. பூரம் - பெண் எலி
12. உத்தரம் - எருது
13. அஸ்தம் - பெண் எருமை
14. சித்திரை - ஆண் புலி
15. சுவாதி - ஆண் எருமை
16. விசாகம் - பெண் புலி
17. அனுஷம் - பெண் மான்
18. கேட்டை - கலைமான்
19. மூலம் - பெண் நாய்
20. பூராடம் - ஆண் குரங்கு
21. உத்திராடம் - மலட்டு பசு
22. திருவோணம் - பெண் குரங்கு
23. அவிட்டம் - பெண் சிங்கம்
24. சதயம் - பெண் குதிரை
25. பூரட்டாதி - ஆண் சிங்கம்
26. உத்திரட்டாதி - பாற்பசு
27. ரேவதி - பெண் யானை
இவற்றில், பொருத்தம் இல்லாதவை:
பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி
மேலே உள்ளது படி இருந்தால், பொருத்தம் இல்லை.
6.ராசி பொருத்தம்
ராசி பொருத்தம் என்பதும் வம்ச விருத்தியை வழிவகை செய்யும் பொருத்தங்களில் (மகேந்திர - நாடி) ஒன்று. இந்த பொருத்தம் இருந்தால் அனைத்து வளங்களும் குறிப்பாக ஆண் வாரிசு பிறக்கும் என்று சில சாஸ்திரங்களில் சொல்ல படுகிறது. இந்த பொருத்தம் இருப்பின் வம்சம் தலைக்கும்.
பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்
6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.
8-வது ராசி பொருந்தாது.
7-வது ராசியானால் சுபம்.
அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது.
1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் மத்திமம்.
7.ராசி அதிபதி பொருத்தம்
பனிரெண்டு ராசிகட்கு அதிபதி உண்டு. அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையால் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. பெண்ணின் ராசி அதிபத, ஆணின் ராசி அதிபதிக்கு பகை என்று உறவு எனில் மட்டுமே பொருத்தமில்லை. நட்பு, சமம் எனில் பொருத்தம் உண்டு.
8.வசிய பொருத்தம்
வசிய பொருத்தம் என்பது, கணவன் மனைவி இருவருக்கும், வசியத்தை ஏற்படுத்தி வாழ்நாள் முழுதும் பூரண அன்புடன், ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் இனிமையாக வாழ்வதற்கு உதவும். வசிய பொருத்தம் உள்ள தம்பதிகள் வாழ்க்கை முழுவதும் அன்புடனும், நிம்மதியுடனும் வாழ்வார்கள். ஒவ்வொரு ராசிக்கும் அதற்கு ஏற்ற வசியம் உள்ள ராசியுடன் மட்டும் தான் பொருந்தும்.
பெண் ராசி - பையன் ராசி
மேஷம் - சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் - கடகம், துலாம்
மிதுனம் - கன்னி
கடகம் - விருச்சிகம், தனுசு
சிம்மம் - மகரம்
கன்னி - ரிஷபம், மீனம்
துலாம் - மகரம்
விருச்சிகம் - கடகம், கன்னி
தனுசு - மீனம்
மகரம் - கும்பம்
கும்பம் - மீனம்
மீனம் - மகரம்
- இவை வசியம் பொருத்தமுடையவை. மற்ற ராசிகள் பொருந்தாது
.
9.ரச்சுப் பொருத்தம்
ரஜ்ஜீ பொருத்தம் என்பதே பொருதங்களில் முக்கிய பொருத்தம், பத்து பொருத்தத்தில் ஒன்பது பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜீ இல்லை என்றால் திருமணம் செய்ய மாட்டர்கள், அந்த அளவு இந்த பொருத்தத்தை நம் முன்னோர்கள் முக்கியமாக வைத்துள்ளனர்.
ரஜ்ஜீ என்பது ஐந்து பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை
சிரோ ரஜ்ஜீ உடைய நட்சத்திரங்கள்: மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகியவை சிரோ ரஜ்ஜீ கொண்டவை.
கண்ட ரஜ்ஜீ உடைய நட்சத்திரங்கள்: ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகியவை – ஆரோஹனம் கொண்டவை
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவை – அவரோஹனம் கொண்டவை
உதார ரஜ்ஜீ உடைய நட்சத்திரங்கள்: கார்த்திகை, உத்தரம், உத்ராடம் ஆகியவை – ஆரோஹனம் கொண்டவை
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை – அவரோஹனம் கொண்டவை
ஊரு ரஜ்ஜீ உடைய நட்சத்திரங்கள்: பரணி, பூரம், பூராடம் ஆகியவை - ஆரோஹனம் கொண்டவை
பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை – அவரோஹனம் கொண்டவை
பாத ரஜ்ஜீ உடைய நட்சத்திரங்கள்: அசுவினி, மகம், மூலம் ஆகியவை – ஆரோஹனம் கொண்டவை
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை – அவரோஹனம் கொண்டவை.
ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவாக இல்லாமல் பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்.
ஒரே ரஜ்ஜீவில் ஆரோஹனம், அவரோஹனம் என இரு பிரிவுகள் உள்ளது. சிலர் பெண் மற்றும் ஆண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவில் இருந்தாலும், ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம் என்றும் கூறுகின்றனர், ஆனால் தயவுசெய்து இந்த பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்ய வேண்டாம்
10.வேதை பொருத்தம்
வேதை எனும் சொல்லுக்கு துன்ப நிலை என பொருள்படும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரே ஒரு நட்சத்திரம் வேதையாக அமையும். இவ்வித வேதை நட்சத்திரம் ஒரே ரச்சுவாக ரச்சு பொருத்தம் இல்லாத நட்சத்திரமாகவே அமையும். ரச்சு பொருத்தம் குறுகிய கால மணவாழ்வு கூட சந்தோஷமாக அமைந்து முடியலாம். ஆனால் வேதை நட்சத்திரம் இணைந்தால் அந்த குறுயி கால மண வாழ்வும் துன்பமாகவே அமையும்.
ஜோதிடம்
ஒரு உயிர் மண்ணுலகுக்கு வரும்போது அவர்களின் பிறவி குணம் எவ்வாறு அமையும் என்பதை, பிறக்கும்போது 1 சூரியன்(ஞாயிறு), 2 சந்திரன்(திங்கள்), 3 செவ்வாய், 4 புதன், 5 வியாழன், 6 வெள்ளி, 7 சனி மற்றும் ராகு & கேது கிரகங்கள் சுற்றுப்பாதையில் எங்கிருந்தது என்பதை வைத்தும். உடல் கூறுகள் எவ்வாறு அமையும் என்பதை பூமியை சுற்றும் சந்திரன் சுற்றுப்பாதையில் எங்கிருந்தது என்பதை வைத்தும் கணக்கிடப்படுவதே தமிழர்களின் ஆயக்கலையில் ஓன்றான ஜோதிடம்.
சந்திரன் பூமியை ஒருமுறை சுற்ற 27.32 நாட்கள். இதுதான் ஒரு பெண்ணின் கருமுட்டை காலம். இதில் வேறுபாடு ஏற்பட்டால் முன்னோர்கள் தோசம் எனபார்கள்.
இநத ஒரு சுற்றில் சநதிரன் 27 நட்சத்திர கூட்டங்களின் காந்த அலைகளை கடக்கும். இதுவே 27 நட்சத்திரங்கள்.
திருமணப் பொருத்தம் என்பது; கணவன் மனைவியாக இணையும் இருவருக்கும் நிலையான மன ஒற்றுமை, மகிழ்ச்சி, இன்பமான தாம்பத்திய உறவு, பிள்ளைப் பேறு, சுபிட்சமான எதிர்காலம் என்பன அமையுமா? என இருவருடைய ஜாதகங்களின் உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தைக் (நிலைகளைக்) கொண்டு கணித்து அறிதல் .

No comments:
Post a Comment