Tk Kalapria
சிங்கப்பூரில் நடைபெற்ற கவிதைப்பயிலரங்கிற்கான முன்னோட்ட உரையின் முதல் பகுதி
அன்புள்ள நண்பர்களே,
அனைவருக்கும் வணக்கம்,
"Military justice is to justice what military music is to music." -Groucho Marx
ராணுவ நீதியைப் போன்றதே ராணுவ இசையும் என்றொரு பிரபலமான மேற்கோள் ஒன்று உண்டு.ராணுவ இசையும் இசைதான் ஆனால் அதில் ஒரு ஒழுங்கு இருக்கும். சுதந்திரமாக ரசித்து அனுபவிக்க முடியுமா...அதனால் இது ஒரு பயிலரங்கம் என்ற ஏதும் இறுக்கத்துடன் இருக்க வேண்டாம். Just relax.
உங்களுக்குச் சில தயாரிப்புகள் பற்றி ஏற்கெனவே குறிப்புகளும் கேள்விகளும் தரப்பட்டிருக்கிறது. அவை உங்களுக்கு, வகுப்பறை - ஆசிரியர் போன்ற மனோபாவத்தை உண்டுபண்ணியிருந்தால் அதை மறந்து விடுங்கள் எனபதே என் இப்போதைய வேண்டுகோள்.கண்டிப்பாக அவற்றை வைத்து நாம் விவாதிக்க இருக்கிறோம். இப்போதைக்கு நாம் சுதந்திரமாக உரையாடலாம்.
கவிதை எழுதுவதும் கவிதை படிப்பதும் கடினமானதா. இதற்கு நேர்மறையான பதில், ’கடினம் இல்லை’ என்பதே .
சில கவிதைகள், கடினமான கவிதைகள் நமக்கு ஒரு தயக்கத்தைத் தருகிறதே என்று கேட்பீர்களேயானால் ’ஆமாம்’ என்ற எதிர்மறையான விடையை என்னிடமிருந்து பிடுங்குகிறீர்கள் என்றே சொல்லுவேன். கண்ணதாசன் பாணியில் சொன்னால் ‘உண்டென்றால் அது உண்டு இல்லையென்றால் அது இல்லை.’ அதனால் நாம் நேர்மறையாகவே யோசிப்போம்.
அவ்வை சொல்லியிருக்கிறாரில்லையா சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்று. தொடர்ந்த பயிற்சியின் மூலம் நல்ல கவிதைகள் எழுத முடியும். கவிதை எழுதக் கற்றுக் கொள்ளவும் முடியும்.
பிறவிக் கவிஞர் என்று ஒருவர் கிடையவே கிடையாது. அல்லது எல்லோரிடமும் கவிதை படைக்கும் ஆற்றல் ஒளிந்தே இருக்கிறது. சிறிய முனைப்புடன் செயல்படுகிற யாராலும் கவிதை எழுத முடியும்.
திட்டவட்டமான பாடத் திட்டங்கள் மூலம் அல்ல, எளிதான பகிர்ந்து கொள்ளல் மூலம்,நாம் கொஞ்சம் கற்றுக் கொள்ளலாம்
உண்மையில் சொன்னால் ஒவ்வொரு நொடியிலும் ஒரு படைப்பாளி கற்றுக் கொண்டேதான் இருக்கிறான். ஒரு வகையில் சொன்னால் நான் இப்பொழுது கூட இங்கே உங்களிடம் கற்றுக் கொள்ளவே வந்திருக்கிறேன்.
கற்றுத்தரவரவில்லை. தவிரவும் வாழ்க்கை நமக்கு தினம் தோறும் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. வாழ்க்கையிலிருந்துதான் எல்லாப் படைப்புகளும் தோன்றுகின்றன.
இன்றைய கவிதை என்பது அநுபவத்தின் சாரத்தை உணர்த்துவது, விவரிப்பது அல்ல. உணர்த்துவதற்கும் விவரிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
“கவிதை என்பது வாழ்க்கையின் தடயம். நம்முடைய வாழ்க்கை நன்றாக எரிந்திருந்தால் அதன் சாம்பலே கவிதை.”
என்று லியானார்ட் கோஹன் என்பவர் கூறுகிறார்.
இந்த மேற்கோள்கள் எல்லாமே ஒரு விஷயத்தை நன்கு உணர்ந்த பின் இறுக்கமான வார்த்தைகளில் சொல்லப்படுவதைக் கவனித்தீர்களா. இது எவ்வளவு விஷயங்களை யோசிக்க வைக்கிறது வாழ்க்கையை எரித்துப் பார்க்கச் சொல்கிறார்.
பாரதி சொன்ன தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்த லாலா எனக்கு நினைவுக்கு வருகிறது.
வாழ்க்கை /நமக்குப் பல சொற்களைத்/ தருகிறது. வாழ்க்கை/ பல சொற்களைப் பிடுங்கவும்/ செய்கிறது./ எஞ்சியவை எங்கே போகிறது./ அவை நல்ல கவிதையில் இருக்கிறது. என்று இந்த உரையைத் தயாரிக்கும் போது ஒரு சுமாரான கவிதை தோன்றியது.
ஆனால் வேறு நல்ல கவிதைகளை அறிமுகம் செய்து கொள்வதே நமது நோக்கம். என் வாசிப்பில் நான் படித்த சில நல்ல கவிதைகளைச் சொல்லுகிறேன். உங்கள் வாசிப்பில் இவற்றை விட நல்ல கவிதைகளை நீங்கள் எதிர் கொண்டிருக்கலாம். இரண்டு பேருக்கும் பொதுவானவையும் இருக்கலாம்.முதலில் நான் சிலவற்றை ஆரம்பிக்கிறேன்.
தமிழ்ப் புதுக் கவிதையின் மூலவர்களில் ஒருவர் இரா.மீனாட்சி. சி.சு செல்லப்பா 60 களில் நடத்திய ’எழுத்து’ காலத்திலிருந்தே எழுதி வருபவர், ஆனால் அதிகமும் பேசப்படாதவர். அவரது ஒரு கவிதை, எளிய கவிதை, அரை நூற்றாண்டைக் கடந்த நவீன கவிதை.
--------------------------------------------------------------------------------------
எதிர் நிற்கிறேன்
________________
வீரனே வாளெடுக்கிறாய்
நான் பகை
கவசமெடுக்கிறேன்
தோழனே! சிரிக்கிறாய்
நான் பகை
கூடச் சிரிக்கிறேன்
இறைவனே!அருளுகிறாய்
நான் பகை
குமுறி அழுகிறேன்
இதில் ஒரு அடுக்கு முறை இருக்கிறது. –விரிவாக- அது அளவாக இருக்கிறது. அதனாலேயே இது அழகாகவும் இருக்கிறது. இதையே இன்றைய வார்த்தைகளில் சுருக்கியும் வாசிக்கலாம். ஆனால் சிலவற்றைச் சுருக்க முடியாது.
சுருக்க முடியாத அளவுக்கு இறுக்கமாக இருப்பதே ஆகச்சிறந்த கவிதை.
-------------------------------------------------------------------------------------------
ஒரு கியூபா கவிதை
போர்
எல்லா விமானங்களும் இருப்பிடங்களுக்குத் திரும்பி விட்டன
எல்லா மனிதர்களும் வீடுகளுக்குத் திரும்பவில்லை
எல்லா வீடுகளும் திரும்பினவர்களின் வீடுகளாயில்லை
திரும்பினவர்களின் வீடுகளில் எல்லாமும் இருக்கவில்லை
-Manuel Diaz Martinez
இது மொழி பெயர்ப்பு என்றால்க் கூட இதில் ஒரு வரியை, ஏன் ஒரு வார்த்தையைக் கூட மாற்ற முடியாது.

இன்னொரு கவிதை,தமிழின் முக்கியமான கவிஞரான சுகுமாரன் எழுதியது.
கையில் அள்ளிய நீர்
================
அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலை புரளுமதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்.

No comments:
Post a Comment