Sunday, January 10, 2016

பொங்கல் வாழ்த்து (10-01-2016)

                   புதுப் பொங்கல்
                     ---------------
அறுவடைநேரத்தின்  திருவடிப்பாதத்தில்
          சேர்த்துக்குவித்த  பெரும்விளைச்சல்
இருப்புப்பொங்கல்  விருப்புப்பொங்கல்
          உறவுப்பொங்கல்  பரம்பரைப்பொங்கல்

பழசைநீக்கி  புதுசைஆக்கி
          ஆடைஅணி  வீடுவாசல்
அழகாய்க்கோலம்  புதிதாய்த்தோரணம்
          புந்தொளிமகிழப்  புதுப்பொங்கல்

உழவுக்கும்  உரத்துக்கும்
          பழக்கிவைத்த  காளைக்கும்
குழந்தைகன்று  பால்கொடுக்கும்
           பசுக்களுக்கும்  பசுமைப்பொங்கல்

விளைந்ததில்   உயர்ந்ததில்
          புதுப்பானை  புத்தடுப்பில்
வளைக்கரங்களில்  எழுதாளம்
          சூழமீள  களிப்புப்பொங்கல்

  உயிர்த்தொழில்  பயிர்த்தொழில்
           உயர்குடும்பச்  செயர்த்தொழில்
வயலென்றும்  தோட்டமென்றும்
           விளையென்றும்  முயலுந்தொழில்

வேட்டைவிட்டு  வீட்டைக்கட்டி
          நாட்டைக்கட்டி  கோட்டைகட்டி
பாட்டன்களில்  பழம்பாட்டனே
          கண்டதொழில்  நாட்டுக்கெழில்

சொந்தமண்ணில்  தந்தைஎண்ணத்தில்
           உந்துதநொழில்  சிந்துவியர்வையில்
எந்த ஊழலிலும்  சிந்தையிழந்திடா
            நிந்தைவந்திடா  சொந்தத்தொழில்

அடைமழை  கிடுகிடுவெள்ளம்
           படைவந்து  குடும்பமீட்பு
படகில்கடந்த  குடிநீர்உணவு
           மனிதாபிமானம்  போற்றும்பொங்கல்


சல்லிக்கட்டுக்கு  மல்லுக்கட்டும்
          புத்தகானுபவ  மிருகானுதாபம்
பல்லாண்டுகள்  இல்லாத்தடை
          சொல்லாதுசெல்லும்  வெற்றிப்பொங்கல்


படித்துவிட்டு  பிடித்தநாட்டில்
          பாட்டைக்கழிக்கும்  நாட்டுமக்கள்
துடிப்புடனே  நடத்தித்திடும்
          பண்பாட்டுப்  பயணப்பொங்கல்


பச்சரிசி  புழுங்கரிசி
          பறிக்கும்மரம்  அறியலியே !
எத்தகயதோ !! வெளியிடத்தில்
          ஏங்குவாரிசு  இதயப்பொங்கல்


உலகுருண்டையில்  வலம்வருகிற
          தமிழோசையின்  எதிரொலியில்
கலந்துவரும்  கலையழகில்
           நனைந்துவரும்  நினைவுப்பொங்கல்


விழாவிழாமல்  வியாபாரப்பாரம்
             எழுச்சியூட்ட  பொருட்பொங்கல்
குளிர்பனிபோய்   தெளிவான்ஒளி
          வழிகாட்டும்  விழிப்புப்பொங்கல்


உலகனைத்தும்  நினைத்துமகிழும்
             உற்சாகஉயிர்ப்  பொங்கல்வாழ்த்து !
நலம்பலவாய்  தமிழுலகம்
             நிலைத்துவாழ  வாழ்த்துமேல்வாழ்த்து !!

          
          
         






      
            

No comments: