பனைமர வேட்கை பயணம்
பின்னர் அவர்கள் ஏலிம் சென்றடைந்தனர். அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும் எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தன. தண்ணீருக்கருகில் அவர்கள் பாளையம் இறங்கினர். (விடுதலைப்பயணம் 15: 27)
16 மே 2016 - 02 ஜூன் 2016...
ரசாயனி (மும்பை) முதல் நாகர்கோவில் (குமரி மாவட்டம்)
பனைமரம் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில் வாழும் ஒரு பயனுள்ள பனை வகை தாவரங்களுள் ஒன்று. இது வறண்ட பகுதிகளில் மிகுதியாக காணப்படுவதுடன் வறட்சி நேரங்களில் சுவையான பானங்களை தர வல்லது. பனைத் தொழிலானது, விவசாயம் மற்றும் நெசவு ஆகிய தொழில்களுக்கு பிறகு இந்திய அளவில் 3ம்மிடத்தில் இருக்கும் மிக அதிக தொழிலாளர்களை கொண்ட ஒரு துறையாகும்.
கும்பகோணத்தைச் சார்ந்த அருணாச்சலம் என்பவர் எழுதிய "தாலவிலாசம்" எனும் நூல் பனை மரத்தின் 801 பயன்பாடுகளை அள்ளியிறைக்கும் நூல் என கூறுவர்.
எனினும், நவீன காலத்தில் பனை மரத்தின் பயன்பாடு அதன் முழுமையை அடையவில்லை. இன்றைய நுகர்வோர் பனை சார்ந்த பயன்பாடுகளை அறியாததினால் பனைத் தொழிலானது நலிந்து வருகிறது.
ஒரு பனைமரம் வளர்ந்து பயன் தர சற்றேரக்குறைய 40 ஆண்டுகள் ஆகின்றது. மேலும் வெப்பமயமாதல் எனும் சூழலியல் மாற்றத்திற்கு ஏற்ற மரமும் இது, ஆயினும் பனைமரம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது.
சமய பற்றாளர்கள் பனை மரத்தினை மதிப்புடன் அணுகினாலும், குறிப்பிடதகுந்த இடம் பனைமரத்திற்கு அளிக்கவில்லை என்பது உண்மை. பல்வேறு குழுக்கள், ஜாதிகள் பனைத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்குள் தொழில் சார்ந்த கருத்துப் பறிமாற்றமோ இன்ன பிறவோ நிகழாததால் அனைவரும் பிரிந்தே இருக்கின்றனர்.
ஆகவே எனது பயணம் தெக்காண பகுதியில் ஒரு பனை வழி சாலையைக் கண்டடையும், அது பிரிந்திருக்கும் குழுக்களை ஒன்றிணைத்து அவர்களுக்குள் பயனுள்ள தொழில் முறை தகவல் பறிமாற வழிவகை செய்து, பலருக்கும் தொழில் வாய்ப்புகளைப் பெருக்கும்.
பனைதொழில் சார்ந்து ஏற்படும் விழிப்புணர்வால் பனைமரங்கள் அழிக்கப்படாது பாதுகாக்கப்படும்.
பனைமரங்கள் வறண்ட பகுதிகளிலும், அரசு அலுவலக வளாகங்களிலும், சமய பொதுவிடங்களிலும், கல்விசார் மையங்களிலும் நட்டு பேணி பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பனைமரத்தின் வகைகளைக் கண்டறியும்பொருட்டு, பல்வேறு வகையான பனம்பழங்களின் நிழற்படங்கள் சேமிக்கப்படும், கூடவே பல்வேறு இடங்களில் காணப்படும் தொழில்முறை உத்திகள் மேலும் பல குழுக்கள் சார்ந்த திறமைகள் வெளிக்கொணரப்படும்
பனைமரம் சார்ந்து ஒரு புதிய கணக்கெடுப்பு நடத்த அரசிடம் பரிந்துரைச் செய்யும்
அச்சு, இணைய மற்று காட்சி ஊடகங்களை இணைத்து இவைகள் முன்னெடுக்கப்படும்
அருட்பணி. காட்சன் சாமுவேல்
போதகர்
மும்பை பிராந்திய மாநாடு
இந்திய மெதடிஸ்ட் திருச்சபை
ரசாயனி - நில்ஷி YMCA கேம்ப் சைட் - தலேகாவுன் - டெகு ரோடு - பூனா -
பீக்வான் - தேம்புர்னி - ஷோலாபூர் - பசவகல்யாண் – சஹீரபாத் - ஹய்தராபாத் - சூர்யபேட் - நடிகம - விஜயவாடா - மச்சிலிபட்டினம் - சிரலா - கோதபட்டணம் -
கவாலி - குடூர் - சிறீசிட்டி - சென்னை - மகாபலிபுரம் - பெருங்காட்டூர் - செய்யார் - பாண்டிச்சேரி - சிதம்பரம் -
தரங்கம்பாடி - திருவாரூர் - வேதாரண்யம் - காட்டுமாவடி - தேவிபட்டிணம் - ராமேஸ்வரம் - சேதுகரை - வெம்பார் - தூத்துக்குடி - திருச்செந்தூர் - இடிந்தகரை - கன்னியாகுமரி - நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம்.

No comments:
Post a Comment