Thursday, December 29, 2016

புத்தாண்டு (2017) *

புத்தாண்டு  வாழ்த்துக்கள்
         2017
-------------------------
ஓடிய  கடிகாரம்
    நடுரா  ஒருமுள்
தேடிய  இமைப்பிடை
    பிறந்திட்ட  புத்தாண்டு


கோபுர  மணியும்
    கப்பல்  சங்கும்
வாண  வண்ணமும்
    வானில்  வெடியும்


நகரம்  அதிரும்
    நடைபாதை  திணரும்
கிழக்கில்  தொடங்கும்
    மேற்கில்  முடியும்


இடையில்  எழும்பும்
    மக்கள்  ஒலியும்
இடைவிடாது  ஒலிக்கும்
    பூமிப்  பரப்பும்


ஆலய  மணியில்
    கிராமங்கள்  எழும்பும்
ஆனந்தப்  பாடல்
    ஆலயந்  தோறும்


அலங்கார  விளக்கு
    அலையென  எழும்பும்
துலங்கும்  மகிழ்வும்
    துளிர்த்துக்  கிழம்பும்


ஒருபாதி  பகலில்
    மறுபாதி  இரவில்
ஒருநாள்  கொண்டாடும்
    பூமியில்  புத்தாண்டு


சுற்றஞ்  சூழப்
    பெற்ற  இன்பம்
போற்றி  வாழ்க
    புத்தாண்டு  வாழ்த்து .
   



 

No comments: