Tuesday, January 10, 2017

தமிழ்-தமிழர் பற்றி 10-1-2017

ஏர்தழுவல்
----------
பல்லாயிரம் ஆண்டுகள்
பாரம்பரியம்


காலத்துக்கேற்ற
மாற்றம்


ஊர் கூடி
வீரர் ஓடி
ஏர் தழுவும்
வீர விளையாட்டு


சரித்திரம் மறந்து
உணர்வுகளை
குப்பையில் எறிந்து


வீடு புகுந்து
உரிமை பறிப்பது

முரட்டு  அதிகார
குருட்டுக் கோர தாண்டவம்


இடித்த இதயத்தில்
மீண்டு மீண்டும்
இடிக்குந் தார்
சொட்டு ரத்தம்


எதுர் அனல்
பற்றிக் கொள்ளுமுன்
மீட்டெடுத்தாக வேண்டும் .

No comments: