2017-02-02@ 11:55:46
தரங்கம்பாடி: சாயப்பட்டறைகளில் ஏற்படும் கழிவுநீரை சுத்தமாக்கி மறு சுழற்சி முறையில் மீண்டும் அதே நீரை பயன்படுத்தும் வகையில் புதிய கருவியை பொறியியல் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு கெமிக்கல் இன்ஜினீயரிங் படிக்கும் ராஜாராம் மற்றும் ரமேஷ் ஆகியோர் சாயப்பட்டறையில் ஏற்படும் கழிவுநீரை நல்ல நீராக மாற்றும் புதிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர். இதுகுறித்து இருவரும் கூறியதாவது: தமிழ்நாட்டில் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக அளவு ஜவுளி தொழிற்சாலைகள் இருப்பதால் அதிக அளவில் சாயகழிவு நீரால் விவசாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள், இதற்கு தீர்வு காண முடிவு செய்தோம்.
முதல் கட்டமாக சாயத்துறை வல்லுனரான கரூர் ரங்கசாமி என்பவரிடம் எங்கள் சந்தேகங்களை கூறி அதற்கு தீர்வு கண்டோம். அதன் தொடர்ச்சியாக விவசாயத்தில் கழிக்கப்பட்ட பொருட்களான நெல், உமி, கடலை ஓடு, தேங்காய் ஓடு, கரும்புசக்கை போன்றவற்றில் ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் எரியூட்டப்பட்டு வீரியம் உள்ள கரித்தூளாக மாற்றினோம். அந்த கரித்தூளை ஒரு குடுவையில் போட்டு அதில் சாயக்கழிவுநீரை ஊற்றி ஒரு சிறிய மோட்டார் மூலம் நன்றாக கலக்கும்படி செய்தோம்.
அப்படி செய்தபோது கரித்தூள்கள் சாயக்கழிவுகளை சுத்திகரித்து அதிலுள்ள கடின உலோகங்களான லெட், சிங்க், காப்பர், மெர்குரி ஆகியவற்றை தனியாக வடிகட்டி விட்டது. பின் அதிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை மறுசுழற்சி மூலம் சுத்திகரித்தோம். அப்போது சாயக்கழிவுநீர் சுத்தமாகி மீண்டும் சாயத்தொழிலுக்கு பயன்படும் நீராக மாறியது. இதன் மூலம் சாயக்கழிவினால் ஏற்படும் தீமைகள் அகற்றப்பட்டு விவசாய நிலங்களும், நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் இந்த முயற்சிக்கு தரங்கம்பாடி ஹைடெக் ரிசர்ச் பவுண்டேசன் இயக்குனர் முரளி, அருணை கல்லூரி பேராசிரியர்கள் ரகுபதி, விமல்குமார் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர் என்றனர் மாணவர்கள்.

No comments:
Post a Comment