Thursday, April 20, 2017

சிறப்புச் செய்தி (20-4-2017)


                                    புங்கை  மரம்


வெப்பத்தையும்,மாசுவையும் குறைக்கும் குணமுள்ளது புங்கை. இம்மரம் பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும். அதிக இலைகளை கொண்டிருக்கும். லேசான காற்றுக்கே நல்ல அசைவினை கொடுத்து, இம்மரத்தின் கிளைகள் அதிகமான குளிர்ச்சி நிறைந்த காற்றை நமக்கு கொடுக்கும். இம்மரம் காற்றில் உள்ள மாசுக்களை (கார்பன்டை ஆக்ஸைடு) வடிக்கட்டி நல்ல காற்றினை (ஆக்சிஜன்) நமக்கு தரவல்லது. 
அதேபோல், இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணிக்கும் திறன் கொண்டது. அதனால்,இயற்கையை அழித்து நாம் செய்த பெரும்பாவத்திற்கு மாற்றாக இந்த மரத்தை நட்டு புண்ணியம் தேடலாம். பள்ளி,அரசு வளாகங்களில் 5 முதல் பத்து மரமும், 30, 40 வீடுகள் உள்ள மாநகர, நகர தெருக்களில் பத்து புங்கனும், பெரிய வளாகங்களில் 15 மரங்கன்றுகளை நட்டு வளர்க்கலாம். அதேபோல், கிராமங்களில் வீட்டிற்கு ஒரு புங்கன் மரக்கன்றை வீட்டின் முன்பு நட்டு வளர்க்கலாம். வளிமண்டலத்தில் உள்ள வெப்ப காற்று குளிர்காற்றாக மாறும். அதன்மூலம், நம்மை தாக்கும் வெயிலின் உக்கிரம் குறையும். இந்த மரத்தின் வேர் கடினப் பாறைகளை,வீட்டு சுவர்களை துளையிடாமல், மண் பகுதிகளுக்குள்ளேயே சுற்றி சுற்றி செல்லும் திறன் கொண்டதால், வீடுகளின் அஸ்திவாரங்களையோ, அல்லது சுவர்களையோ பாதிக்காது. அதனால், வீடுகளுக்கு அருகில் எங்கு வேண்டுமானாலும் இந்த மரத்தை நட்டு வளக்கலாம். 




 

No comments: