Friday, September 23, 2022

சிறப்புச் செயதி.

 

18 h 
கம்ப்ளிட் திராவிட கட்டுடைப்பு.. 😉
திராவிடர்கள் யார்? - சி.பா.ஆதித்தனார்
-----------------------
1. கேள்வி:
திராவிடர்கள் யார்?
பதில்: திராவிடர்கள் என்போர்
தெலுங்கர்கள். (தமிழர்கள் திராவிடர்கள் அல்ல) ஆந்திரம்,
கலிங்கம், தெலுங்கானம் ஆகிய
மூன்று தெலுங்கு நாடுகளில்
வாழ்ந்தவர்களான "திரி- வடுகர்களே"
திராவிடர்கள்.
2.கேள்வி:
"திராவிடர்" என்ற சொல்லை
தமிழர்களுக்குப் பயன்படுத்துவது
பொருந்துமா?
பதில்: பொருந்தவே பொருந்தாது. 1875ஆம்
ஆண்டிற்கு முன் "திராவிடர்" என்ற சொல் தெலுங்கர்களை மட்டுமே குறித்து வந்தது.
அந்த ஆண்டில் "கால்டுவெல்
என்ற வெள்ளைக்காரர் தான் அவர் எழுதிய
புத்தகத்தில் அதுவரை ஆந்திரர்களை
மட்டுமே குறிப்பிட்டு வந்த 'திராவிடர்'
என்ற சொல்லைத் தமிழர்களைக்
குறிப்பதற்கும் பயன்படுத்தப்
போவதாகத் முட்டாள்தனமாக தெரிவித்து அதன்படியும் எழுதினார். குழப்பமும் செய்தார்.
அவர் கையாண்டது தவறான கருத்து.
ஏனென்றால் முன் காலத்தில் இருந்து
மூன்று தெலுங்கு நாடுகளைத் தான்
"திரிவடுகம்" என்றும், திராவிடம்
என்றும் வடவர்கள் சொல்லி வந்தார்கள்.
திரிவடுகர் நாட்டிற்குத் தெற்கே
வாழ்ந்து வந்த தமிழர்களுக்கும் இந்தச்
சொல் பொருந்தும் என்று கால்டுவெல்
எழுதியது தவறான, முட்டாள்தனமான கண்ணோட்டம்.
அவரைப் பின்பற்றி மற்ற மடையர்களும் "தமிழர்கள்" என்று குறிப்பிடுவதற்கு "திராவிடர்" என்ற சொல்லை பயன்படுத்தியதும் மிகப்பெரிய
தவறாகும். வரலாற்று பிழையாகும்!
தமிழன், தன்னை "திராவிடன்"
அதாவது "திரிவடுகன்" அல்லது
தெலுங்கன் என்று சொல்வது
இழிவாகும்! அவமானமாகும்! "திராவிடன்" என்பது தமிழ்ச்
சொல்லே அல்ல. வடவர்கள்
தெலுங்கர்களுக்கு இட்ட பெயர் அது.
3.கேள்வி:
திராவிடம் என்று பழந்தமிழ்
இலக்கியத்தில் இருக்கிறதா?
பதில்: எந்தத் தமிழ் இலக்கியத்திலும்
திராவிடம் என்ற சொல் கிடையவே
கிடையாது. அந்தச் சொல்லை முதன்
முதலில் பயன்படுத்தியது "கால்டுவெல்"
என்கிற வெள்ளைக்காரர் வட
மொழியிலிருந்து தான் திராவிடம்
என்ற சொல்லைக் கண்டு பிடித்ததாக அவரே கூறியிருக்கிறார்.
4.கேள்வி:
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை "திராவிட
நற்றிரு நாடு" என்று குறிப்பிட்டு
இருக்கிறாரே?
பதில்: தெலுங்கர்களைக் குறிக்கும்
"திராவிடம்" என்ற சொல்லைத் தான்
நான் கையாண்டேன் என்று
கால்டுவெல் என்னும் வெள்ளைக்காரர்
எழுதியுள்ளார். அதற்குப் பிறகு
சுந்தரம் பிள்ளை எழுதிய
மனோன்மணீயம் இன்றைக்கு 70
ஆண்டுகளுக்கு முன்பு
எழுதப்பட்டதாகும். அது தவறுதான்!
5.கேள்வி:
இலக்கியம், சரித்திரம் ஆகியவற்றில்
கூறப்பட்டுள்ள "திராவிட நாட்டை"
தாங்கள் மறுப்பது ஏன்?
பதில்: நம் தமிழ்ப் புலவர்கள் எழுதிய எந்த இலக்கியத்திலும் "திராவிடன்" "திராவிடநாடு" என்ற சொற்களே இல்லை. மிக அண்மைக் காலத்தில் அந்நியர்களால்
எழுதப்பட்ட நூல்களில் தான்
"திராவிடம்" என்ற வடசொல்
காணப்படுகிறது. நம் தமிழ் இலக்கியங்களில் இல்லவே இல்லை!
6.கேள்வி:
தெலுங்கு, மலையாளம், கன்னடம்
ஆகிய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த
மொழிகள் என்பதால், இந்த நான்கு மொழி பேசுபவர்களும் ஏன் இதன் வழி "திராவிட நாடு" என்கிற அடிப்படையில்
ஒன்றுபடக் கூடாது?
பதில்: கல்தோன்றி மண் தோன்றக்
காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த இனம் தமிழினம். தமிழ்மொழி தான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே
தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க
வேண்டும். அதனால் உலகம்
முழுவதும் ஒரே நாடாக "தமிழ்நாடாக" இருக்க வேண்டும் என்று யாராவது
கூறுவார்களா? ஒரு மொழி, ஒரு நாடு! என்பது தான் உலக நியதி.
நன்றி: சிவபாரதி எழுதிய 'தமிழர்
தந்தை சி.பா.ஆதித்தனார்'
நூலிலிருந்து.
May be an image of 1 person and text
இராவணன் செ and 461 others
30 comments
163 shares
Like
Comment
Share

No comments: