Saturday, May 29, 2010

அதுக்கு இது !----001

சுழல்வது சூரியன்
உருள்வது நாள்
விழுவது மழை
எழுவது முளை
பசிக்குப் புசிக்க
செடி கொடி
புல் பூண்டு மரம்
இலை தழை
புசித்ததைக் கழிக்கும்
உயிர்கள்
கழித்ததைப் புசிக்கும்
வேர்கள்
மழைக்குத் தழை
தழைக்கு மழை
இதுக்கு அது ?

No comments: