பதநீர்
---------
பதனிக்கு நிகராமோ ! சான்றோர் தந்த
பதனிக்கு நிகராமோ ! ஆ.....ஹா... (பதனிக்கு...)
பதனிக்கு நிகரெது ? துதிசெய்வோம் !--நாமிந்த
பாரில் பலவிதமாய்
கூறிச் சிலவிதமாய் (பதனிக்கு...)
ஓ....
மாவைக் கலத்திலிட்டு
மீளப் பிசைந்து--பசும்
மாட்டின் பாலோடு--சேர்த்துக்
கூட்டி ருசிகண்டாலும் (பதனிக்கு....)
வாழைக் கனிபசி
வேழைக் குதவும்படி
கனியைப் பறித்து --அதன்
தொலியை உறித்தெறிந்து (ஓ...மாவைப்..)
தேங்காய்தனை எடுத்து
பாங்காய் உடைத்துவைத்து
சிறுகத் திருகி--அதை
பொரிய வறுத்தெடுத்து (ஓ....மாவைப்...)
(இது பதநீர் பற்றி எங்கள் கிராமத்தில் பாடி ஆடப்படும்
களியல் பாடல்.எழுதியவர் தெரியாது.முன்னோர் சொத்தாக
வழி வழியாய் பாடப்படுவது.
எனக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து,எங்கள் வீட்டுப் பக்கத்திலிருந்து விரிந்து கொண்டே போகும் மனங்காடு. இன்றோ மொட்டை காடு.
என் நினைவில் மட்டும் நிழலாடிக் கொண்டே இருக்கிறது பழைய நினைவு மட்டும்.
நான் கண்டு கலந்து உண்டு ருசித்து அனுபவித்தவைகள் ஏராளம்.எதிர் பாருங்கள் பதநீர் தொடங்கி என் அனுபவங்களை.)

No comments:
Post a Comment