பதநீர் 7
--------
கறுப்புப் பனை தரும்
வெளுப்பு நுரைப்
பால், பதநீர்
அண்ணாந்து பாத்து
விண்ணுயர்
தொழில்
அந்தரத்தில் செய்யும்
சுதந்திரத் தொழிலின்
பலன் பதநீர்
அயர்வில்லா உயர்வில்
செய்யும்
தனித்துத் தொழில்
பனியும் வெயிலும்
தாங்கிச் செய்யும்
இனிப்புத் தொழில்
அக்கம் பக்க
உச்சிப் பனையில்
தக்க அனுபவத்தோடு
பரிமாறிக் கொள்ளும்
அனுபவத் தொழில்
வெற்றிச் சரங்கள்
பனங் குறும்பல்கள்
சிறுகச் சிறுகப்
பெரிதாகி
பருவ விருந்தாக
விம்மி விரிந்து
நுங்காகிப்
பழமாகி
கனிந்து விழுந்து
மறு சந்த்திக்கு
வித்திடும்
பெண் பனைகளும்
பால் தரும்
அதுவும்
இரு மடங்கு
காலமும் பதநீர்
அளவிலும்
பப்குவமாய் இடுக்கி
பாளை அரிவாள் கொண்டு
குறும்பை
பெருத்திடாமலும்
உதிர்ந்திடாமலும்
சீவி விட வேண்டும்
சவரக்கத்தி கூர்மையில்
பாளை அரிவாள்
தடமோ தடையமோ
இல்லாமல் பாளை சீவ
பனையின் சாரம் முழுதும்
பாளைத் தண்டிலே
திரளும்
பருவம் வந்த
பனைப் பெண்பாளையில்
குறும்பல் பெருத்து
இடையில் சிறுத்து
உடுக்கு அடுக்குகளாக
மாறி வரும்
இடுக்குங் கடிப்பு
வேறு வசதியோடு தேவை
கூன் விழுந்த இரு கம்பு
கூன்கள் எதிர் திசையில்அமையக்
கட்டப் பட்டிருக்கும்
கடிப்புக் கட்டின் பக்கம்
பாளையை அழுத்து முனை
அமையப் பெற்றிருக்கும்
சீராக இடுக்க
சிறந்த அமைப்பு
கை கொடுக்கும்
கட்டுப்பாளை
மூன்று மாத மென்றால்
பருவப்பனை ஆறு மாதங்கள்
கறந்து
ஆண்டுக்கொரு வசந்தம்
மீண்டு வரும் .
--------
கறுப்புப் பனை தரும்
வெளுப்பு நுரைப்
பால், பதநீர்
அண்ணாந்து பாத்து
விண்ணுயர்
தொழில்
அந்தரத்தில் செய்யும்
சுதந்திரத் தொழிலின்
பலன் பதநீர்
அயர்வில்லா உயர்வில்
செய்யும்
தனித்துத் தொழில்
பனியும் வெயிலும்
தாங்கிச் செய்யும்
இனிப்புத் தொழில்
அக்கம் பக்க
உச்சிப் பனையில்
தக்க அனுபவத்தோடு
பரிமாறிக் கொள்ளும்
அனுபவத் தொழில்
வெற்றிச் சரங்கள்
பனங் குறும்பல்கள்
சிறுகச் சிறுகப்
பெரிதாகி
பருவ விருந்தாக
விம்மி விரிந்து
நுங்காகிப்
பழமாகி
கனிந்து விழுந்து
மறு சந்த்திக்கு
வித்திடும்
பெண் பனைகளும்
பால் தரும்
அதுவும்
இரு மடங்கு
காலமும் பதநீர்
அளவிலும்
பப்குவமாய் இடுக்கி
பாளை அரிவாள் கொண்டு
குறும்பை
பெருத்திடாமலும்
உதிர்ந்திடாமலும்
சீவி விட வேண்டும்
சவரக்கத்தி கூர்மையில்
பாளை அரிவாள்
தடமோ தடையமோ
இல்லாமல் பாளை சீவ
பனையின் சாரம் முழுதும்
பாளைத் தண்டிலே
திரளும்
பருவம் வந்த
பனைப் பெண்பாளையில்
குறும்பல் பெருத்து
இடையில் சிறுத்து
உடுக்கு அடுக்குகளாக
மாறி வரும்
இடுக்குங் கடிப்பு
வேறு வசதியோடு தேவை
கூன் விழுந்த இரு கம்பு
கூன்கள் எதிர் திசையில்அமையக்
கட்டப் பட்டிருக்கும்
கடிப்புக் கட்டின் பக்கம்
பாளையை அழுத்து முனை
அமையப் பெற்றிருக்கும்
சீராக இடுக்க
சிறந்த அமைப்பு
கை கொடுக்கும்
கட்டுப்பாளை
மூன்று மாத மென்றால்
பருவப்பனை ஆறு மாதங்கள்
கறந்து
ஆண்டுக்கொரு வசந்தம்
மீண்டு வரும் .
No comments:
Post a Comment