Monday, June 2, 2014

காமராசர் 2/6/14.

காமராஜர்

வறண்ட பூமியான தமிழகத்தின் மண்ணை அணைகள் கட்டி வளம் கொழிக்க வைத்தவர் காமராஜர் ஒருவரே!தமிழகத்தை தங்கத் தமிழகமாக மாற்றிய பெருமை அவருக்கே உண்டு .
முதல்வராக இருந்து அ...வர் நிறைவேற்றிய திட்டங்கள் :

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மணிமுத்தாறு அணை கட்டப் பட்டது.இதனால் 20 ஆயிரம் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேட்டூர் அணையில் 2.5 கோடி செலவில் கால்வாய்கள் அமைக்கப் பட்டன .இதனால் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

அமராவதி அணை 3 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்டது இதனால் 47 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது .

2.5 கோடி செலவில் வைகை அணை கட்டப் பட்டது.இதனால் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன் பெறுகிறது

2.5 கோடி ரூபாய் செலவில் சாத்தனூர் அணை கட்டப் பட்டது.இதனால் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

வாளையாறு அணை 1 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்டது இதனால் 6,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

மங்கலம் அணை 50 லட்சம் செலவில் கட்டப் பட்டது.இதனால் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.

ஆரணி அணை 1 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்டது, இதனால் 1,100 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது.

காவேரி டெல்டா பகுதியில் 30 லட்சம் செலவில் கால்வாய்கள் புதுப்பிக்கப் பட்டன .

கிருஷ்ணகிரி அணை 2 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்டது.இதனால் 7, 500 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகிறது.

10 கோடி ரூபாய் செலவில் கீழ் பவானி திட்டம் ஏற்படுத்தப் பட்டது.
இதனால் 2 லட்சம் ஏக்கர் பயன் பெறுகிறது.


புள்ளம்பாடித் திட்டம் 1.5 கோடி ரூபாயில் உருவாக்கப் பட்டது. இதனால் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன .

கோமுகி ஆற்றுத் திட்டம் 75 லட்சம் செலவில் உருவாக்கப் பட்டது.இதனால் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன .

பேச்சிபாறை ,ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் குந்தா ஆகிய அணைகள் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப் பட்டன

No comments: