Thursday, June 5, 2014

பதநீர் 10

பதநீர்  10

கறுப்பு மரத்துள்
வெளுப்பு இருப்பை
உணர்ந்த
ஞானக் கண்ணன்
பனைத் தொழிலாளி

வறண்ட நிலத்தில்
உருண்ட நீர் கம்பமாய்
எழுந்த தொண்டன்
பனை

மண்ணுள் வேரும்
விண்ணில் ஓலையும்
வடிகட்டிகளாய்
சுத்திகரித்து
வாழும்
நீண்டநாள்
தொண்டன் பனை

நூறு ஆண்டுகள்
உயர்ந்து உயர்ந்து
உயிர் வாழும்
நேரிய மரம்
பனை பனை
பனை மட்டுமே

கழை போல
சுற்றி வைரம்
மத்தியில் சோறு
சோற்றுள் பாதி சாறு

சோறெல்லாம்
இனிப்பு கலந்த நீரு

பனையுள் நாற்பது சதம்
நீர்

ஓலை ஓலையாய் விட்டு
அணு வணுவாய் வளர்ந்து
நூறு அடிகள் வளரும்
நூறு ஆண்டும் வாழும்

நீர் கம்கம் பனை
எந்த மண்ணுக்கும்
இல்லாத வறண்ட மண்
வரப்பிரசாதம்
வளர் நீர் கம்பம்
பனை

 பனியைத் தாங்கும்
உச்சிப் பனை ஓலை
உறுஞ்சும்
நிலத்து நீரை
வேர் நுனி

வற்றாத அந்தர
நீர் தேக்கம்
பனங் கண்டம்

எல்லா உயிர்களுக்கும்
உள்ள
காயத்தை ஆற்றும்
மருந்து சுரக்கும்
தானியங்கி அமைப்பு
உண்டு பனைக்கும்

அந்த எந்திரத்தை
ஒரு நிலையில்
இயக்கி வைப்பது
இடுக்கல்

அந்த நிலையில்
பனை பதநீரை
விருந்தாக வைக்கும் என்ற
உணர்வை
உள் உணர்வால் பெற்றவன்
பனைத் தொழிலாளி

பதநீர்
மனுக்குலம் வாழ
தெய்வீக அமுதம்

மனித உணவுள்
புனித நீர்
பதநீர் !

No comments: