Sunday, June 1, 2014

பனை(யை) நினை *

நினையாப்  பனையால்  பீரங்கி !
---------------------------
எதிர் நீச்சல் போட்டும்
கோடுபோல்  உயர்ந்து வரும்
நாடார் குல
வீரரே வணக்கம் !

ஆளவும் வாழவும்
பன்முகத் திறன் கொண்ட
மூத்த குடி தோன்றி
மண்ணு லகாண்ட
மா மனித வர்க்கமே

சதி  யென்ற
விதி கொண்டு
பனங் காட்டில் ஒடுக்கி
ஒருமுக மாக்கப் பட்டுக் கிடந்த
ஒரு காலமுண்டு

சந்தித்த இன்னல்
சரித்திர இருட் டடிப்பு
உரிமை மறுப்பு

ஊதிய  மில்லா உழைப்பு
எனும் பட்டியல்......
நீண்டு....கொண்டே...போம்

கும்மிருட்டில் ஓளிர்
மின்னலாய்
வீர நாடார்
வரலாற்று
நற்சாட்சி
இதோ...

குமரி மாவட்ட
குளச்சல் துறை முகத்தில்
எழுந்துள தூண்
போர்ச் சின்னம்

அது நாடார் கு
வீரத்தின் மதி நுட்பத்தின்
குறி ஈடு !

வல்லவனுக்குப் புல்லும்
ஆயுதம் என்ற நிரூபணம் !

ஆனாலும்
ஏட்டில் எழுதவில்லை
பாட்டில் வடிக்க வில்லை
வலைத் தளங்கள்
பதவி படைத்தவரைத்தான்
முன் மொழிகிறது !
இன்று
ஓர் ஆய்வாளரின்
ஒற்றைக் குரலாய்
ஒலிக்கிறது

அந்த வெற்றிகள்
வந்த பின்புலத்தில் இருப்பவர்
நாடார்கள்-ஆம்
நாடார்கள் மட்டுமே !

அன்றும் உண்டு
ஆட்சி யாளரிடம்
ஒரு படை
முழுதும்
நாடார் படை
திடீர் எதிரி
அரபிக் கடலில்
அலை மோதின
போர்க் கப்பல்கள்
காலாட் படை
குதிரைப் படை
பீரங்கிப் படை

அனைத்தும் மேனாட்டுப் படை
விஞ்ஞான உச்சத்தின்
வெடி மருந்து
பீரங்கிப் படை

பயிற்சி பெற்ற வீரர்
நிச்சயிக்கப் பட்ட வெற்றிக் களிப்பில்
டச்சுப் படை

அச்ச மூட்டும்
உச்ச கர்ச்சனை !

வில்லும் கல்லும்
மல்லும் கம்புமே
கையிலே கொண்ட
மன்னர் படை .
களமிறங்கும்  தளபதி
ஆழாமாய் யோசித்தார் யோசித்தார்.........
யோசித்தார் நாட்களாக
பிறந்தது  வழி !

படை எண்ணிக்கையைக்
கூட்டிவிட முடி வெடுத்தார்
திரண்டது  திடீர்ப் படை
நெல்லையின் தென் எல்லை
நாடார்கள்
துணை வந்தார்கள் !

பீரங்கி பாரெங்குமே
கிளப்பியது
அதிர் வலைகள்

புதிய கண்டு பிடிப்பு
வெடி மருந்தும்
பீரங்கியும்
நாடுகள்  வீழ்ந்தது
காலனி ஆதிக்கத்துள்.

வெட்டிப் போட்ட
வடலி  போல் கிடந்தது
கப்பல் தளத்தில் பீரங்கி !

மன்னர் படையாம்
நாடார் மூளை
உண்டாக்கியது பீரங்கி
அதுவோ
மனை மரத்தால் !

பனையை வெட்டி
குடைந்து சோற்றை  நீக்கி
கல்லும் வெடி மருந்தும்
திணித்து
கொளுத்தினார்
தென்னவர்

எதிரி எண்ணத்தில்
மண்ணைப் போட்டது
பனைப் பீரங்கி !

உச்சி வெயில்
கொதி மணல்
படை குவிந்தது
பனை ஓலை விரிப்பில் களம்
தண்ணீர் கொட்டியதில்
சொட்டியது ஓலை
தணிந்தது சூடு !

புதிய களம்
ஆயுதம் பயிலா
முகப்பு வீரர்
மோத வந்தார் !

உடை இல்லை
வீர
நடை இல்லை
படைப் பாங்கே இல்லை !

டச்சுக்காரனுக்கு
வராதா சிரிப்பு ?

எவனுக்குத் தெரியும்
கச்சை கட்டிய
நாடார் படை பலம் ?
கல் உடைப்பு
வெடி மருந்து
மரம் வெட்டு
தச்சுப் பணியெல்லாம்
தேர்ந்தவர் நாடார் அன்றே

பனைக்கும் தரைக்கும் தானே
உலகோர் கண்கள்
கண்டது !

போர்க்கலை
பயிர்த் தொழில்
வீடு கட்டல்
கல்வி ஆட்சி
பன்முகத் திறனில்
நாடார் நாடார் .நாடார்
எங்கும் நிறைந்திருந்த
காலமுண்டு .

பனையால் பீரங்கி
வேறு எவன் சிந்தையில் வரும் ?
அனல் கக்கும்
அச் சம்பவ ஆண்டு  1741
மாதமோ ஜீலை
தேதி 31.
மன்னர்
மார்த்தாண்ட வர்மா
சண்டை

டச்சுப் படைக்கும்
திருவிதாங்கூர் படைக்கும்.
குளச்சல் துறைமுகம்
உச்சி வெயில்
மத்தியான வேளை
கொதி மணல்.

டச்சுத் தளபதி டிலனாய்
அரசு படை நாடர்
சண்டை காரணம்
படையோடு டச்சுக்காரன்
டிலனாய் தூதுவனாய்

அரசு தரப்பில்
அனந்த பத்ம நாப நாடர்

டச்சுக் காரன்
கேட்டதுங் கேட்டான்
கேட்கக் கூடா ததையெல்லாம்
கேட்டுவிட்டான் .

வாசனைத் திரவியம்
வாங்க வந்தவன்
வய்ச் சொல்லே
நாற்றமாய்ப் போச்சு !

அவன் போட்டியாளர்
ஆங்கிலேயர்
பிரஞ்சுக்காரர்  கப்பல்கள்
நங்கூரமிட
குளச்சலில் அனுமதிக்கக் கூடாது
கட்டளை தொக்கிய வேண்டுகோள்

எலம் கிராம்பு
அவன் கேட்ட
விலைக்கே
கொடுக்க வேண்டும்

மறுத்தால்
நவீனம் பயின்ற
படை உண்டு

விஞ்ஞான உச்சத்தில்
பீரங்கி உண்டு
படைக் கப்பல்
கடற் பரப்பெல்லாம்
மார் தட்டினான் டிலனாய் !

தன்னுயிர் கொடுத்தும்
அன்னை மண் காக்கும்
அனந்த பத்ம நாப நாடார்
கொதித் தொழுந்தார் !

கல்லும் வில்லுமே
கையிருப்பாய் இருந்தாலும்
யுத்தத்திற்கே  துணிந்து விட்டார் .

மார்த்தாண்ட மன்னர் படைக்கு
குமார மார்த்தாண்ட நாடார்
தலைமை ஏற்றார்
போர் தந்திரம்
வியுகம்
அனைத்திற்கும்
அந்த பத்ம நாப நாடார்.

நாடார்களின் மூளை
குவியங் கொண்டது
கருத்துக்கள் உதய  மாகிடிச்சு
அபாயச் செய்தி
பறந்தது
நெல்லை எல்லைக்கு
காயாமொழி  தண்டப்பத்து
கொம்மடிக் கோட்டை
குட்டம் கொற்கை
உடன் குடி திசையன்விளை
சாத்தான் குளம்
களக்காடு ஏர்வாடி ஊர்
மட்டுமா ?

இடைப்பட்ட சிற்றூர் களிலும்
திரண்டது  திடீர்ப் படை
ஜயாயிரம் சான்றோர்
மலைக்குட்டி நாடார்
தலைமையில் !

கருக்கோடு வரவில்லை
வாலிப
முறுக்கோடு வந்தார்கள்

மூண்டது போர்
நாடார்களின்
போராற்றலின்
பேராற்றல் பிறந்தது
தளபதி வீரம்
படை வலிமை
கண்திறக்கு முன்னே
சுக்கு நூறாகி
புற முது கிட்டது
டச்சுப்படை !

உலகமே கண்டு கேட்டிராத
திடீர் பீரங்கிப் படை
பனை தந்த
பயன் ஆயுதப் படை!

எதிர் பாராத டச்சுக்கள்
கை நடுங்கி
கால் நடுங்கி
389 துப்பாக்கிகள்
வீரர் பலர்
தளபதி டிலனாயை
விட்டு விட்டு ஒளிந்தனர்.

இரக்கம் பரிவு
தோற்றவரிடமும் காட்டிய
நாடார் பண்பு

சரண்டைந்த டிலனாய்
சாகும் வரையில்
திருவிதாங்கூர் படையின்
உயர் பதவியில் !

குமரி புலியுர் குறிச்சி
உதயகிரிக் கோட்டைக்குள்
டிலனாய் சமாதி இன்றும் .

மூன்று நாடார்களின்
தலைமையில்
மூண்ட போர்
வெற்றித் திலகமிட்ட
வீரர் குலம் வாழ்க !
விவேக இனம் வாழ்க !
வழி வழி என்றென்றும் வாழ்க !



 

No comments: