இயேசு பிறப்பு 1
ஓளியில்லை விழியில்லை ஊரடங்கு நள்ளிரவில்
தெளிவில்லை திடனில்லை தூங்கிக்கிடக்கும் மேய்ப்பர்களில்
தீப்பந்தமில்லை விண்கல்லில்லை தெய்வீகஓளி வயல்வெளியில்
பயமில்லை பாவமில்லை பிறந்தார்ரட்சகர் தாவீதூரில் !
மாடமில்லை கூடமில்லை மாட்டுத் தொழுவத்தில்
மெத்தையில்லை முற்றமில்லை மேற்குவித்த புல்லணையில்
பெற்றவரில்லை சுற்றவரில்லை புத்தம்புது மரியருகில்
பெத்தலையில் புத்திர்ராய்ப் பிறந்தாரேசு நடுராவில் !
நாவில்லை நரம்பில்லை வார்த்தை இருந்தது
தொடக்கமில்லை தொடங்குவாரில்லை தேவனாய் இருந்தது
தொட்டதில்லை கைபட்டதில்லை தேவதூதன் சொன்னத
தேவவார்த்தை ஆவிவந்து மரிவயிற்றில் மனுவானது !
வீணில்லை வீம்பில்லை கிருபைசத்தியம் குவித்திருந்தார்
தானில்லை வேறில்லை கிருபைமேல்கிருபை நமக்களித்தார்
காலியில்லை குறைவில்லை பரிபூரணத்தில் பலனளித்தார்
பேரில்லை புகளில்லை எளிமையிலும் எளியர்தோழர் !
தாய்க்கில்லை தகப்பனுக்கில்லை தேவனுக்கே மகிமையென்றது
போரில்லை புகைச்சலில்லை பூமியிலே சமாதானமென்றது
மேலில்லை கீழில்லை மனிதர்மேல் பிரியமென்றது
ஆளில்லை படையில்லை தேவசேனை பூமிவந்த்து !
பகலில்லை பார்வையில்லை வால்நட்சத்திரம் வான்கிழக்கில்
தயக்கமில்லை மயக்கமில்லை சாஸ்திரிகளுக்கு இயேசுபிறப்பில்
தடையில்லை நடையில்லை ஓட்டினார்ஒட்டகம் மேற்றிசையில்
நட்சத்திரம் வழிகாட்ட காணிக்கைகூட்ட வீழ்ந்தார்காலில் !

No comments:
Post a Comment