சிரிப்பு மூலம் சிந்தனை
நாஞ்சில் நாட்டில் ஒழுகினசேரி என்ற கிராமத்தில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29 அன்று கலைவாணர் பிறந்தார்
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘இந்து டாக்கீஸ்’ பகுதியில் வெளியான கண்ணீரை மறைத்த சிரிப்பு மேதை’ கட்டுரை அருமை. அப்போதையத் தமிழ்த் திரைப்படங்களில் தன்னுடைய நகைச்சுவையின் மூலம் பகுத்தறிவு கருத்துக்களைப் புகுத்தியவர் கலைவாணர். அவருடைய நகைச்சுவை யாருடைய மனதையும் புண்படுத்தாது. கலைவாணர் போன்ற நடிகர்களின் நகைச்சுவை ரசிகர் மனதில் என்றும் நிலைத்து இருக்கும். காரணம், மக்கள் மனதில் சமுதாயப் பிரச்சினைகள் பதியும்வண்ணம் நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்குவது அவரது தனிச்சிறப்பு.
என்.எஸ்.கிருஷ்ணனிடம் எண்ணற்ற கலையாளுமைகள் இருந்தன. நாடக ஆசிரியர், நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர். தன்னுடைய மென்மையான நகைச்சுவையால், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள், மூடத்தனங்கள், ஏமாற்றுக்காரர்கள் ஆகியோரை
வன்மையான சொற்களைக்கூடப் பயன்படுத்தாமல் மென்மையாகப் பகடி செய்த சமூக விஞ்ஞானி அவர். பாடலையும் நகைச்சுவைக் காட்சியாக மாற்ற முடியும் என்ற மாயத்தைத் திரையில் முதலில் செய்துகாட்டியவர்.
தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவையை பாடல்களாகவும் அமைக்க முடியும் என்பதை நிரூபித்தவர். சொந்தக் குரலில் பல பாடல்களைப் பாடியுள்ளார். சில படங்களை இயக்கியுள்ளார். அண்ணாவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இவர், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஒரு டாக்டரைப் பற்றி புகழ்ந்து பேசினார். கடைசியில், ‘இவ்வளவு நல்ல டாக்டரை சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு யார் வைத்தியம் பாப்பாங்க? அதனால் அவரை இங்கேயே வைத்துக்கொண்டு அண்ணாவுக்கு ஓட்டு போட்டு சட்டசபைக்கு அனுப்பிவையுங்கள்’ என்றார்.
நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. அவர் வாழ்வும் 49 ஆண்டுகளில் சுருக்கமாக முடிந்தாலும் வரலாறு அவர் பெயரை வாரி அணைத்துக் கொண்டது என்பது மட்டும் உண்மை.
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கே.: இன்று என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம் 30/9/1957.

No comments:
Post a Comment