Sunday, January 25, 2015

குடியரசுத் தின வாழ்த்து-25/01/2015. *

குடியரசு தின  வாழ்த்து  (2015)
--------------------
இருபத்தோறாம்
நூற்றாண்டில்


அறுபத்தாறாம்
குடியரசுடன்
கை குலுக்கு கிறோம்


மேடு பள்ளம்
கடந்து வந்த
அனுபவ சாட்சிகள்
கைவசம்


புது வெள்ளப்
புரட்டலாய்
உலகம்


கை பொடுக்கும் கைகள்
புதுப் புதுசு


சந்திக்கும் சவால்கள்
சிந்தனைக்கு
தூண்டு கோல்


உள்ளும் புறமும்
கொள்ளும்
சமாதான சகவாழ்வே
வழி நடத்தும் சிகரம்


உலக மயத்தில்
தலை தூக்கி நிற்கும்
கலைகள் தோர்வோம்


வந்தவரும்
தந்தவரும்
விருந்தை
மருந்தாக்கி


இருவரும் பலன்
பெற வாழ்த்தினோம்
வாழ்க !



 

No comments: