Wednesday, March 25, 2015

சிறப்புச் செய்தி (25/03/2015-4)


சத்வ குணம் மேல் நிலையிலும் அதற்கடுத்து ரஜோ குணமும் அதற்கும் கீழாகத் தாமச குணமும் அமையப் பெற்றவர்கள் அமைதியும், ஆழ்ந்த சிந்தனைத் திறனும், அறிவாற்றலும் கொண்டு செயல்படுபவர்கள் என்பதனால் இத்தகையவர் பிராமணர் என்றழைக்கப்பட்டனர்.
ரஜோ குணம் மேலேயும், சத்வ குணம் இரண்டாவதாகவும், தமோ குணம் மூன்றாவதாகவும் இருந்தால், அவர்கள் சுறுசுறுப்பாக, லட்சியப் பிடிப்போடு சாதிக்க முயன்று, சமுதாய முன்னேற்றத்திற்காகக் கடுமையாக உழைப்பார்கள். இந்த குணம் சத்திரியர்களுக்குரியது.
முதலில் ரஜோ குணம், அடுத்ததாகத் தமோ குணம், அதனை அடுத்து சத்வ குணம் என்ற ரீதியில் அமைந்தவர்கள் தமக்காகத் தம் சுய முன்னேற்றத்திற்காகக் கருத்துடன் உழைப்பவராக, எதற்கும் கணக்குப் பார்ப்பவராக இருப்பார்கள். அவர்கள் வைசியர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.
தமோ குணம் அதிகமாயும், ரஜோ குணம் அடுத்ததாயும், சத்வ குணம் கடைசியாயும் அமைந்த இயல்பினர் சூத்திரர் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் தமது அடிப்படைத் தேவைகளுக்கு மேலாக வேறு எதையும் கவனிக்க மாட்டார்கள். எது நடந்தாலும் என்ன என்று பார்க்க மாட்டார்கள். பிறர் சொல்லுக்குக் கட்டுப்பட்டுச் செயலாற்றும் இவர்கள், சாப்பிடுவதும் தூங்குவதுமே போதும் என்ற உணர்விலேயே இருந்து கொள்வார்கள். இவர்களிடம் மந்த புத்தியும் சொல்வதைச் செய்யக்கூடிய தன்மையும் மட்டும் தான் இருக்கும். சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திறமை இருக்காது.
இந்த நான்கு பிரிவுகளும் குணத்தால் அமைக்கப்பட்டவையே அன்றி அடிப்படையில் பேதமில்லை. யார் எந்தக் குலத்தில் பிறந்தவராயிருப்பினும் அவரது குணத்தை உற்றுப் பார்த்து அவர் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை அறிய முடியும்.

No comments: