Saturday, June 27, 2015

சிறப்புச் செய்தி(27/6/15--2)


கன்னியாகுமரியில் உள்ள தூய தமிழ் சொல்கள்
குமரி மாவட்டத்திலும் இலங்கையிலும் உள்ள தூய தமிழ் சொல்கள் பல தற்போது தமிழ் வழக்கில் இல்லை. இதை நாம் பல நேரத்தில் மலையாளம் என்று கருதுவோம். அது உண்மையல்ல.

1. சாடு – பாய் (பாய்தல்) ...
ஆதாரம்: அரிச்சந்திர புராணம் 322
அதிபார தனபார அதிரூப மலர்மானை அனையாய் இவன் நதிபாய உயர்போதின் நறைபாய நிறையாத சிறை வாவியில் மதியாமல் வலைபீறி வேடிபோன பருவாளை வளைபூ கமேல் குதிபாய மாடல்கீறி விழுதேறல் கரைசாடு குடநா டனே -


2. உணக்கல் – காய செய்தல்
ஆதாரம்: - திருக்குறள்
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.


3. அலத்தல், அலப்பு – பேராசை, ஆசைநோய்
ஆதாரம்: திருக்குறள் 1303 பாடல்
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்


4. பீடு – பெருமிதம்
ஆதாரம்: திருக்குறள் 1014
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை


5. பீலி – மயிலிறகு, இறகு
ஆதாரம்: திருக்குறள் 475
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்


6. ஓர்மை – உணர்வு, கருத்து, ஞாபகம்.
ஆதாரம்: திருக்குறள்
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை


7. உறைப்பு – திண்ணம் (நிச்சயம்),
ஆதாரம்: பெரியபுராணம் 1795
நின்றமறை யோர்கேளா நிலையழிந்த சிந்தையராய் நன்றருளிச் செய்திலீர் நாணிலமண் பதகருடன் ஒன்ரியாயமன் னவன்சூழ்ச்சி திருத்தொண்டி நுறைப்பாலே வென்றவர்தந் திருபேரோ வேறொருபேர் எனவெகுள்வார்


8. அற்றம் – இறுதி, முடிவு, கரை
ஆதாரம்: திருக்குறள் 421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.


9. அங்கணம் – உள்முற்றம், கழிவுநீர் மடை
ஆதாரம்: திருக்குறள் 720
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொள


10. வெதுப்பு – சூடு, உஸ்ணம்
ஆதாரம்: கம்பராமாயணம் 2811
வந்து கார் மழை தோன்றினும், மா மணிக் கந்து காணினும், கைத்தலம் கூப்புமால்; இந்து காந்தத்தின் ஈர நெடுங் கலும் வெந்த காந்த, வெதுப்புறு மேனியாள்

 
திரிந்த தமிழ்சொல்கள்

1. சவுட்டு = சுவட்டு(சுவடு ஏற்படச்செய்) –>
சவுட்டு(அகர உகர இடமாற்றம்) •


2. போல்மம்: மிஞிறு = ஞிமிறு;

3. ஒலுங்கு = கொசுகு

4. துறையல் = திறவுகோல் –> துறையல்
தாக்கோல் = தாழ்கோல் –> தாக்கோல்


5. சாணாங்கி = சாணகம் –> சாணாங்கி

6. உச்சை = உச்சி பொழுது –> உச்சை பொழுது –> உச்சை

7. வெள்ளனே = காலையிலே, சால்ரா

8. தகராறு – (ப்ரச்சனை என்று வடமொழியில் பலர் இதை கூறுவார்)

9. பூரா = அனைத்தும் (வடமொழியில் பலர் இதை கூறுவார்)

10. வண்ணம் = பருமன் (நிறம் எனும் பொருள் தவறானது வடமொழியான வர்ணத்திலிருந்து வந்தது) • இதற்கு பொருட்டு என்று பொருள் உண்டு • பொருட்டாக கொள்ளப்படும் அளவிற்கு பருமன் உடையது எனும்பொருளில் வண்ணம் எனும் கையாளப்படுகிறது • ஓரளவிற்கு பருமனோ மதிப்போ இருந்தாலொழிய மக்கள் எதையும் பொருட்டே கொள்ளார் .... இங்கே பதியப்பட்டது கசடற தமிழ் கற்போம்

No comments: