மரணம் எல்லாம் மரணம்தானா ?
================================
புழுவின் மரணத்தை செத்துவிட்டது என்கிறீர்கள்
பூவின் மரணத்தை உதிர்ந்து விட்டது... என்கிறீர்கள்
இலையை சருகாகிவிட்டது என்னும் நீங்கள்தான்
கிளையை விறகு என்று வேறு பெயர் சொல்கிறீர்கள்
தீயின் மரணத்தை அணைந்து விட்டது என்று
நோகாமல் சொல்லி விட்டுப் போய்விடுகிறீர்கள் . .
அந்தக் கிழவியின் மரணத்தைக் காலமானார்
என்னும் நீங்கள் இந்தக் குழந்தையின் மரணத்திற்கு
என்ன பெயர் சூட்டுவீர்? .
தலைவன் மரணத்தை மறைந்து விட்டார் என்னும் உங்களால்
புத்தனின் மரணத்தை மட்டும்
முக்தி என்று சொல்ல முடிகிறது.
ஆக…….. மரணம் எல்லாம் ஒரே மரணம் அல்ல
வேறு வேறு மரணங்கள்…”

ஆம் , மரணங்களிலும் செய்தியும் ஞானமும் இருக்கிறது . நம்பிக்கை வறட்சி நிலவும் சமூகச் சூழலில் சாவு குறித்து பேசுவது இயல்பானதோ ? வாழ்வது குறித்து பேசினால் மட்டுமல்ல சாவது குறித்து பேசினாலும் அரசியல் – வர்க்க அரசியல் வந்து தொலைக்கிறதே !
No comments:
Post a Comment