Tuesday, July 7, 2015

சிறப்புச் செய்தி (7/7/15-4)

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க உதவும் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சமையலறைப் பொருட்கள் கீழே


எலுமிச்சை :
எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், அவை எத்தகைய கறையையும் எளிதில் நீக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு பற்களை தேய்த்து 2 நிமிடம் ஊற வைத்து, நன்கு கழுவ வேண்டும். இப்படி 2 வாரங்களுக்கு தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பற்கள் வெண்மையாகும்.
உப்பு :
தினமும் பற்களை துலக்கும் போது, பேஸ்ட்டில் சிறிது உப்பு தூவி, பற்களை துலக்கினால், பற்களில் உள்ள கறைகள் நீங்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக அழுத்தி தேய்த்தால், பற்களில் உள்ள எனாமல் மற்றும் ஈறுகள் பாதிக்கப்படும்.
துளசி :
துளசி இலையை வெயிலில் சில மணிநேரம் உலர வைத்து, பின் அதனை பொடி செய்து, அதனை தினமும் பேஸ்ட் உடன் சேர்த்து பற்களை துலக்கி வந்தால், மஞ்சள் கறைகள் அகலும்.
ஆப்பிள் :
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, பற்களையும் வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ளலாம். அதேப்போன்று கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிட்டு வந்தாலும் பற்கள் வெள்ளையாகும்.
சாம்பல் :
அக்காலத்தில் சாம்பல் கொண்டு பற்களை துலக்கி வந்ததால் தான் என்னவோ நமது பாட்டி, தாத்தாவின் பற்கள் ஆரோக்கியமாகவும், வெள்ளையாகவும் இன்று வரை உள்ளது. ஆகவே இத்தகைய சாம்பலை டூத் பேஸ்ட் உடன் சேர்த்து பற்களை தினமும் 2 முறை துலக்கலாம்.
பேக்கிங் சோடா :
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அதனைக் கொண்டு 2 நிமிடம் பற்களை துலக்கி கழுவ வேண்டும். இப்படி முதல் வாரம் இரண்டு முறையும், பின் 15 நாட்களுக்கு ஒருமுறையும் செய்ய வேண்டும். பேக்கிங் சோடாவை தினமும் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை பற்களின் எனாமலை பாதிக்கும்.
ஆரஞ்சு தோல் :
இரவில் படுக்கும் போது ஆரஞ்சு பழத்தின் தோலைக் கொண்டு பற்களை தேய்த்து, மறுநாள் காலையில் பற்களை கழுவ வேண்டும். இதனால் ஆரஞ்சு பழத்தின் தோலில் உள்ள வைட்டமின் சி மற்றும் கால்சியம் பற்களில் உள்ள மஞ்சள் நிற கறைகளை நீக்கி, பற்களின் வலிமையை அதிகரிக்கும்.
ஸ்ட்ராபெர்ரி :
ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி வளமாக நிறைந்துள்ளது. இதனால் அவை பற்களில் உள்ள மஞ்சள் கறையைப் போக்கும். அதற்கு ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு தினமும் இரண்டு முறை பற்களை தேய்த்து வந்தால், பற்கள் பளிச்சென்று மாறும்.
ஹைட்ரஜன் பெராக்ஸைடு :
ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாயைக் கொப்பளித்தால், மஞ்சள் நிற கறைகளைப் போக்கலாம். முக்கியமாக அப்படி கொப்பளிக்கும் போது, அதை விழுங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 


 
 
 

No comments: