உயிர் தரும் பயிர்த் தொழில்
==============================
மலை மொட்டை
தரை வெட்டை
வெட்டி
மட்பொருள் சுட்டுப்
போட்ட மரம்
மலட்டு மேகக்
கிழட்டுப் பொழிவால்
களத்து மேடாய்க்
காய்ந்த நதி
மணலுக்கும் சனி
நட்ட நெல்
சுட்ட தாள்
தலை பரட்டை
பாசி படந்த அணை
தூசி பறக்குது
எப்படி ? திறப்பது !
உரிமை நீர்
பெறுந் திறன்
பெற்றவர் யார் ?
பட்ட கடன்
வட்டி கட்ட
வழி ? உழவர் !
ஊர் உலகம் வாழ
சோறு போட்டவன்
வயிறு நிறைவு ? கானல் நீர் !
வெடித்த வயல்
துடித்த உழவர்
உயிர் குடித்த
எமன் !
முடித்தானில்லை
பாதகச் செயலை
வ(த)ருமா ?
உதவி !
==============================
மலை மொட்டை
தரை வெட்டை
வெட்டி
மட்பொருள் சுட்டுப்
போட்ட மரம்
மலட்டு மேகக்
கிழட்டுப் பொழிவால்
களத்து மேடாய்க்
காய்ந்த நதி
மணலுக்கும் சனி
நட்ட நெல்
சுட்ட தாள்
தலை பரட்டை
பாசி படந்த அணை
தூசி பறக்குது
எப்படி ? திறப்பது !
உரிமை நீர்
பெறுந் திறன்
பெற்றவர் யார் ?
பட்ட கடன்
வட்டி கட்ட
வழி ? உழவர் !
ஊர் உலகம் வாழ
சோறு போட்டவன்
வயிறு நிறைவு ? கானல் நீர் !
வெடித்த வயல்
துடித்த உழவர்
உயிர் குடித்த
எமன் !
முடித்தானில்லை
பாதகச் செயலை
வ(த)ருமா ?
உதவி !
No comments:
Post a Comment