பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டி.
சுவை, மணம் இருப்பதோடு , மருத்துவ குணமும் அதிகம் .
மருத்துவத் தன்மையின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.
உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் உதவிபுரிகிறது.
பருவம் அடைந்த பெண்களுக்கு பனங்கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியை போக்க பனங்கருப்பட்டி சாப்பிடலாம்.
சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் பனங்கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.
ஓமத்தை பனங்கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.
குப்பைமேனி கீரையுடன் பனங்கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.
ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் பனங்கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு.
காபியில் சீனிக்கு பதிலாக பனங் கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.
சர்க்கரை நோயாளிகளும் கூட பனங்கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் பனங்கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.
சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய உணவாக பனங்கருப்பட்டி கருதப்படுகிறது.
பனங்கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. இதை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்
பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.
தமிழன் பனங் கருப்பட்டி வியாபாரம் 9488909136
ஆரோக்கிய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்கிய பாரதத்தை உறுவாக்குவோம்.....!
No comments:
Post a Comment